Showing posts with label சங்கீதம். Show all posts
Showing posts with label சங்கீதம். Show all posts

Saturday, June 7, 2008

திருவையாறில் 23ம் தேதி தியாகராஜர் ஆராதனை விழா

திருவையாறில் 23ம் தேதி தியாகராஜர் ஆராதனை விழா

Thyagarajar
தஞ்சாவூர்: திருவையாறில் வரும் 23ம் தேதியன்று சங்கீத சத்குரு தியாகராஜரின் 161வது ஆராதனை விழா தொடங்குகிறது.

தியாக பிரம்ம மகோத்சவ சபா சார்பில் தியாகராஜரின் 161வது ஆராதனை விழா வரும் 23ம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவை சட்டீஸ்கர் மாநில ஆளுநர் நரசிம்மன் துவக்கி வைக்கிறார். சபா தலைவர் ஜி.மூப்பனார் தலைமை வகிக்கிறார்.

23ம் தேதி துவங்கும் இந்த விழா 27ம் தேதி வரை நடக்கிறது. துவக்கவிழா அன்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், மாவட்ட கலெக்டர் விஜயராஜ்குமார் உட்பட ஏராளமான இசைக் கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.

தியாகராஜ ஆராதனை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துணை செயலாளர் குன்னக்குடி வைத்தியநாதன் உட்பட அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் செய்து வருகிறார்கள்.

நன்றி : தட்ஸ்தமிழ்

மருத்துவமனையில் குன்னக்குடி வைத்தியநாதன்

மருத்துவமனையில் குன்னக்குடி வைத்தியநாதன்
வெள்ளிக்கிழமை, ஜூன் 6, 2008


தஞ்சை: தஞ்சையில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த வயலின் வித்வான் குன்னக்குடி வைத்தியநாதனுக்கு திடீர் உடல் நலக்குறை ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தஞ்சையில் உள்ள ஆதி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. இதையொட்டி கடந்த இரண்டு நாட்களாக கோவிலில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நேற்றிரவு வயலின் வித்வான் குன்னக்குடி வைத்தியநாதன் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவரது குழுவினர் மேடையில் இசை நிகழ்ச்சி தயாரக இருந்தனர்.

குன்னக்குடி வைத்தியநாதன் மேடை அருகே வந்தபோது திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு முதலுவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று அவரது உடல் நிலை ஒரளவு முன்னேற்றம் கண்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அவர் அழைத்து செல்லப்பட்டார்.

நன்றி : தட்ஸ்தமிழ்