Showing posts with label சித்திரை. Show all posts
Showing posts with label சித்திரை. Show all posts

Friday, July 25, 2008

ஆகஸ்ட் 15 இல் ஒரு பச்சை தேச துரோகம்?

"ஜம்மு காஷ்மிர் லிபரேஷன் ஃபோர்ஸ்" (JKLF) என்கிற பிரிவினைவாத - பயங்கரவாத அமைப்பு இந்திய தேசத்தின் இறையாண்மையை எதிர்ப்பதாகும். காஷ்மிரை தனி நாடாக்க பயங்கரவாதத்தை அங்கிருந்த சிறுபான்மை இந்துக்கள் மீது அவிழ்த்துவிட்ட இயக்கம் இது. இன்றைக்கும் பாகிஸ்தானிய ஆதரவுடன் இயங்கி வரும் அமைப்பு ஜேகேஎல்எஃப். இன்றைக்கு இந்த அமைப்பு இரண்டாக பிரிந்து செயல்படுகிறது. பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள அமைப்பு தனியாகவும் யாசின் மாலிக் தலைமையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இயங்கும் அமைப்பு தனியாகவும் செயல்படுகின்றன. இவை அனைத்துமே ஜமாயத்தி இஸ்லாமி அமைப்பினால் உருவாக்கப்பட்டவைதாம்.

காஷ்மீர இந்துக்களின் இன சுத்திகரிப்புக்கு முதன் முதலில் செயல்வடிவம் கொடுத்த அமைப்பு இதுதான். கல்வி-பண்பாடு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியவர்களும் சமய நல்லிணக்கத்தை போற்றியவர்களுமான இந்து அறிஞர்கள் கொல்லப்பட்டது இந்த அமைப்பினால்தான். இவ்வாறு கொல்லப்பட்ட இந்துக்களின் உடல்களில் ஜேகேஎல்எஃப் அமைப்பின் கொடிகள் குத்தப்பட்டிருந்தன. கொல்லப்படும் காஷ்மீரி இந்துப் பெண்களின் உடலில் இந்த அமைப்பின் பெயர் சூடுபோட்டு பொறிக்கப்பட்டு உடல் பாகங்கள் சிதைக்கப்பட்டிருக்கும். இந்த கொடூரகொலைகளின் விளைவாக இந்து சமுதாயம் முழுவதுமே அச்சுறுத்தப்பட்டு ஜம்முவிலும் டெல்லியிலும் அகதிகளாக வாழும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இன்றைக்கும் இந்த அவல நிலை தொடர்கிறது.

இந்நிலையில் இஸ்லாமிய பயங்கரவாதம் தென்னிந்தியாவில் பயங்கரவாத கட்டமைப்பை மேலும் மேலும் ஸ்திரப்படுத்தியவாறு உள்ளது. பெங்களூரில் 25-07-2008 அன்று நடத்தப்பட்ட தொடர்குண்டு வெடிப்புகள் இதற்கான சான்றாகும். பெங்களூரில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் பேரணி நடத்தியதும் அனைவருக்கும் நினைவு இருக்கும். இன்றைக்கு Popular front of India என்கிற பெயரில் செயல்படும் அமைப்பு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் கூட்டணி ஆகும். உளவுத்துறையை சார்ந்த ஒரு அதிகாரி இந்த அமைப்பு குறித்து கூறுகிறார்:


"பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India (PFI)), பின்வரும் இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பாகும்: கர்னாடகா ஃபார் டிக்னிட்டி (Karnataka For Dignity (KFD), தமிழ்நாட்டை சேர்ந்த மனிதநீதி பாசறை (MNP), மற்றும் கேரளாவின் National Development Front (NDF), இது கடந்த ஆண்டு பிப்ரவரி 16 அன்று பெங்களூரில் தொடங்கப்பட்டது. தடைசெய்யப்பட்ட சிமி இயக்கத் தலைவர்களால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. மங்களூரிலும் கேரளாவில் பல இடங்களிலும் வன்முறை செயல்பாடுகளில் இந்த அமைப்புகள் ஈடுபட்டன. சிமி தொடர்புடைய வஹாபி மற்றும் ஸலாஃபி இஸ்லாமியவாதிகளின் கூட்டமைப்பாக தென்னிந்தியாவில் செயல்படும் முதல் அமைப்பு இது இனி வரும் ஆண்டுகளில் தெற்குபிராந்தியங்களில் பாகிஸ்தானியத்தனமான ராணுவப்படுத்தப்பட்ட அடிப்படைவாதம் இந்த அமைப்புகளால் உருவாக்கப்படலாம்."



உளவுத்துறையின் மூத்த அதிகாரியின் இந்த பார்வை உண்மையாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் அதிர்ச்சி தரும் யதார்த்தம். பாரத சுதந்திர தினத்தன்று இந்த பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரளத்தில் விடுதலை நாள் அணிவகுப்பு நடத்துவதாக தென் மாநிலங்கள் எங்கும் அறிவித்துள்ளது. இதற்காக
வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்களில் மிகப் பெரிய அளவில் ஜம்மு காஷ்மிர் பரேஷன் ஃபோர்ஸ் பயங்கரவாத-பிரிவினைவாத அமைப்பின் கொடி வரையப்பட்டுள்ளது.








சென்னை மதுரை பாண்டிச்சேரி திருநெல்வேலி நாகர்கோவில் உள்ளிட்ட அனைத்து தமிழக நகரங்களிலும் இந்த பயங்கரவாத-பிரிவினைவாத அமைப்பின் கொடி வரையப்பட்டுள்ளதுடன் இது பாரத விடுதலைth திருநாளுடன் இணைக்கப்பட்டு இந்தியாவின் இறையாண்மைக்கே வெளிப்படையாக சவால் விடப்பட்டுள்ளது. இத்தகைய வெளிப்படையான தேசதுரோக செயல் தமிழ்நாட்டில் அரங்கேறுவதற்கு காரணம் என்ன? ஒரு சாதாரண பாரத பிரஜைக்கே தெரிகிற இந்த விஷயம் தமிழ்நாட்டு உளவுத்துறைக்கு தெரியாமலா இருக்கும்? தமிழ்நாட்டு உளவுத்துறையின் கரங்களை கட்டிப்போட்டிருப்பது யார்?

இந்த ஓட்டுவங்கி அரசியல்வாதிகளால் வளர்த்துவிடும் இந்த பயங்கரவாதிகளால் நாளைக்கு குண்டுவெடிப்புகளில் இறக்கப் போவது நாமும் நம் குழந்தைகளும் அல்லவா? தாய் நாட்டை நேசிக்கும் தமிழர்கள் அனைவரையும் இந்திய இறையாண்மைக்கு எதிராக செய்யப்படும் இந்த தேசத்துரோக வெறியாட்டத்தை கண்டித்து அவரவர்கள் உள்ளூர் காவல் நிலயங்களுக்கு புகார் அளிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.

அஞ்சல் துறை அலுவலக வாசலிலேயே அந்த பிரிவினைவாத அமைப்பு தங்கள் கொடியை பகிரங்கமாக வரைந்திருப்பதைக் காணுங்கள்:


Thursday, May 1, 2008

மதுரை சித்திரை திருவிழா 30ம் தேதி தொடக்கம்

மதுரை:மதுரை மாநகரின் கோலாகல திருவிழாக்களில் ஒன்றான சித்திரைத் திருவிழா வருகிற 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தென்திருப்பதி என ஆழ்வார்களால் பாடபெற்றது மதுரை அருகே உள்ள அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில். அழகர் கோவில் என பக்தர்களால் அழைக்கப்படும் இக்கோவிலில் பிரசித்தி பெற்ற திருவிழா சித்திரைத் திருவிழா.

இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா வருகிற 28ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. 29ம் தேதி சுவாமி புறப்பாடு நடைபெறும். 30ம் தேதி கள்ளழகர் தங்கப் பல்லக்கில் பவனி வருவார்.

மே 1ம் தேதி மதுரை தல்லாகுளத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 2ம் தேதி காலையில் வைகை ஆற்றில் அழகர் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார்.

வியாழக்கிழமை 3ம் தேதி காலை சேஷவாகனத்தில் அழகர் எழுந்தருளி தேனூர் மண்டபம் போய் சேருதலும், மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் தரும் நிகழ்ச்சியும், கருட சேவையும் நடைபெறும். அன்றிரவு தசாவதார சேவை நிகழ்ச்சி இரவு முழுவதும் நடைபெறும்.

4ம் தேதி அழகர் ராஜா சேதுபதி மண்டபம் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 5ம் தேதி பூப்பல்லக்கில் அழகர் பவனி வருகிறார். 6ம் தேதி கள்ளழகர் அழகர் மலைக்கு வந்து சேருகிறார். இத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறும்.

தகவல் பெற்ற தளம்: http://thatstamil.oneindia.in/news/2007/04/08/madurai.html