மதுரை:மதுரை மாநகரின் கோலாகல திருவிழாக்களில் ஒன்றான சித்திரைத் திருவிழா வருகிற 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தென்திருப்பதி என ஆழ்வார்களால் பாடபெற்றது மதுரை அருகே உள்ள அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில். அழகர் கோவில் என பக்தர்களால் அழைக்கப்படும் இக்கோவிலில் பிரசித்தி பெற்ற திருவிழா சித்திரைத் திருவிழா.
இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா வருகிற 28ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. 29ம் தேதி சுவாமி புறப்பாடு நடைபெறும். 30ம் தேதி கள்ளழகர் தங்கப் பல்லக்கில் பவனி வருவார்.
மே 1ம் தேதி மதுரை தல்லாகுளத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 2ம் தேதி காலையில் வைகை ஆற்றில் அழகர் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார்.
வியாழக்கிழமை 3ம் தேதி காலை சேஷவாகனத்தில் அழகர் எழுந்தருளி தேனூர் மண்டபம் போய் சேருதலும், மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் தரும் நிகழ்ச்சியும், கருட சேவையும் நடைபெறும். அன்றிரவு தசாவதார சேவை நிகழ்ச்சி இரவு முழுவதும் நடைபெறும்.
4ம் தேதி அழகர் ராஜா சேதுபதி மண்டபம் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 5ம் தேதி பூப்பல்லக்கில் அழகர் பவனி வருகிறார். 6ம் தேதி கள்ளழகர் அழகர் மலைக்கு வந்து சேருகிறார். இத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறும்.
தகவல் பெற்ற தளம்: http://thatstamil.oneindia.in/news/2007/04/08/madurai.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment