Showing posts with label தாய் மதம். Show all posts
Showing posts with label தாய் மதம். Show all posts

Sunday, July 20, 2008

குடிமல்லூரில் தாய் மதம் திரும்பும் விழா


குடிமல்லூரில் தாய் மதம் திரும்பும் விழா


வாலாஜாபேட்டை, ஜூலை 13: வாலாஜாபேட்டையை அடுத்த குடிமல்லூர் கிராமத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தாய் மதம் திரும்பும் விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

நிகழ்ச்சிக்கு வி.எச்.பி. அகில பாரத இணைச் செயலாளர் ஜி. சத்தியம் தலைமை தாங்கினார். திருவலம் சாந்தசுவாமிகள் தாய் மதம் திரும்பிய அனைவருக்கும் புண்ணியதீர்த்தம் அளித்தார்.

ராணிப்பேட்டை பெல் பகுதியை சேர்ந்த மைக்கேல் ராஜ், மேரி மற்றும் தஞ்சாவூர், திருச்சி சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் தாய் மதம் திரும்பினர்.

கோட்ட அமைப்பாளர் ராஜா, மாவட்ட செயலாளர் கணேஷ், இளைஞரணி அமைப்பாளர் வினோத், பா.ஜ.க மாவட்ட செயலாளர் கஜேந்திரன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் துரை சக்தி, செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தாய் மதம் திரும்பியவர்களுக்கு ராமாயண புத்தகமும், சுவாமி படமும் வழங்கப்பட்டது.