பயங்கரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டம் தேவை : மோடி வலியுறுத்தல்!
திங்கள், 13 அக்டோபர் 2008( 17:43 IST )
http://tamil.webdunia.com/newsworld/news/national/0810/13/1081013064_1.htm
பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இது போன்ற சட்டங்கள் பயங்கரவாத சக்திகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவதற்கு மட்டுமின்றி இந்தியாவின் படித்த இளைஞர்கள் தீவிரவாத சிந்தனையில் விழுவதில் இருந்து தடுக்கவும்தான் என்று கூறினார்.
புது டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் பேசிய அவர், தீவிரவாதிகள் வளர்ந்த மற்றும் முன்னேறிய மையங்களையும், நகரங்களையும் இலக்காக வைத்து தாக்குதல்களை நடத்தி நாட்டு மக்கள் மத்தியில் பாதுகாப்பின்மையை பரப்பி வருகின்றனர் என்றார்.
இதுபோன்ற சக்திகளை சமாளிக்க உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த அரசியல் பலம் தேவை அல்லது இந்த நாடு பெரிய விலை கொடுக்க நேரிடும் என்றும் அவர் கூறினார்.
படித்த இளைஞர்கள் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபடுவதுடன் பயங்ரவாதம் வளர்வது சமூக நல்லிணக்கத்துக்கு நல்லதல்ல என்றும் தேசிய ஒற்றுமைக்காக அது போன்றவர்களையும், அமைப்புகளையும், மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற பெயரில் படித்தவர்கள் இது போன்ற சக்திகளை ஆதரிப்பதையும் கண்டறிய வேண்டும் என்றும் கூறினார்.
பயங்கரவாத்துக்கு எதிரான நமது போரில் யார் ஆதரிக்கிறார்கள், யார் ஆதரிக்கவில்லை என்பதற்கிடையே தெளிவான கோட்பாடு வேண்டும் என்றும் மதமாற்றம் போன்ற நடவடிக்கைகளால் சமூக அமைதியில் அடிக்கடி இடையூறு ஏற்படுகிறது என்றும் மோடி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment