Wednesday, October 8, 2008

உளவுத்துறை: தீபாவளியை சீர்குலைக்க 600 `சிமி' தீவிரவாதிகள் திட்டம்

நன்றி: தினத்தந்தி
http://www.dailythanthi.com/article.asp?NewsID=443331&disdate=10/8/2008&advt=1

தீபாவளி பண்டிகையை சீர்குலைக்கும் வகையில் தமிழகம் உள்பட 9 மாநிலங்களில் நாசவேலையில் ஈடுபடுவதற்காக 600 `சிமி' இயக்க தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


புதுடெல்லி, அக்.8-


கடந்த ஜுலை 25-ந் தேதி பெங்களூரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில்
குண்டுகள் வெடித்தன. அதைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலும், டெல்லியிலும் சங்கிலித்தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன.


இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். டெல்லியில் மீண்டும் குண்டு வெடிப்பு
நடந்தது. திரிபுரா, மராட்டிய மாநிலங்களிலும் சமீபத்தில் குண்டு வெடிப்பு
நடத்தப்பட்டது.


`சிமி' அமைப்பு


இந்த தொடர் தாக்குதல்களால் நாடு முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு நடந்த மாநிலங்களில் போலீசார் விசாரணை நடத்தி ஏராளமான தீவிரவாதிகளை கைது செய்தனர்.

தடை செய்யப்பட்ட இந்திய மாணவர் இசுலாமிய இயக்கத்தைச் (சிமி) சேர்ந்த
இவர்கள், `இந்தியன் முஜாகிதீன்' என்ற பெயரில் இந்த குண்டு வெடிப்புகளை
நடத்தி இருப்பது தெரிய வந்தது.


600 தீவிரவாதிகள்


கைதான தீவிரவாதிகள், தங்களுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் பட்டியலையும், அவர்கள் எந்த மாநிலத்தில் பதுங்கி இருக்கிறார்கள் என்ற விவரத்தையும் அளித்துள்ளனர். அதன்படி, தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகம், டெல்லி, மராட்டியம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 9 மாநிலங்களில் 600 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.


இவர்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் மிக முக்கிய
தீவிரவாதிகள் தனியே அடையாளம் காணப்பட்டுள்ளனர். குஜராத் குண்டு வெடிப்பு தொடர்பாக கைதான தீவிரவாதி கம்ருதீன் நகோரி, 35 தீவிரவாதிகள்
பட்டியலையும், ஆமில்பார்வேஸ் என்ற தீவிரவாதி, 125 தீவிரவாதிகள்
பட்டியலையும் அளித்துள்ளான். இவர்கள் அனைவரும் மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், பல்வேறு நகரங்களில் ஊடுருவி இருப்பதாகவும் அத்தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.


வெளிநாட்டினருக்கு தொடர்பு


சீன நாட்டைச் சேர்ந்த 2 முஸ்லிம்களுக்கு குண்டு வெடிப்பில் தொடர்பு
இருப்பது தெரிய வந்துள்ளது இவர்கள் 2 பேரும் உத்தரபிரதேசம், கேரளா,
மராட்டியம் ஆகிய மாநிலங்களில் தீவிரவாதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது.


சிமி தீவிரவாதிகளுக்கும், வளைகுடா நாடுகளில் உள்ள சிலருக்கும் தொடர்பு
இருப்பதையும் தீவிரவாதி கம்ருதீன் நகோரி தெரிவித்துள்ளான். அவர்களின்
பெயர், செல்போன் நம்பர் போன்ற விவரங்களையும் தெரிவித்துள்ளான்.


உளவுத்துறை ஆலோசனை


அவ்வப்போது தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்து உளவுத்துறை எச்சரிக்கை
விடுத்தும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது மத்திய
அரசுக்கு கவலையை அளித்துள்ளது. இதுபற்றி விவாதிப்பதற்காக, டெல்லியில்
உளவுத்துறை அதிகாரிகளின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம், 2 நாட்களாக நடந்தது.

அதில், தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களின் தீவிரவாத தடுப்பு போலீஸ்
அதிகாரிகள் கலந்து கொண்டனர். உளவுத்துறை இயக்குனர் பி.சி.ஹெல்தார்
தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


தீவிரவாதிகள் அளித்த தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. 600
தீவிரவாதிகளையும் அடையாளம் கண்டு, அவர்களை கண்காணிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.


மீண்டும் குண்டு வெடிப்புக்கு சதி?


தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், அதை சீர்குலைக்கும் வகையில்
தீவிரவாதிகள் மீண்டும் குண்டு வெடிப்பில் ஈடுபடலாம் என்று
கருதப்படுகிறது. அதை முறியடிப்பதற்கான அதிரடி விïகங்கள், இக்கூட்டத்தில்
விவாதிக்கப்பட்டன. தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்து கிடைக்கும் தகவல்களை ஒவ்வொரு மாநிலமும் மற்ற மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

No comments: