Monday, October 20, 2008

காம விளையாட்டு ஒலிம்பிக்ஸ்: கேரள பிஷப்பை முந்தினார் தமிழ்நாட்டு பாதிரியார்



மதம் மாற்றும் வீரர்களுக்கு, அப்பாவி மக்கள்தான் குறிக்கோள். இந்தியா போன்ற ஏழை நாடுகள் அவர்களது காம மற்றும் காசு வெறியை தீர்த்துக்கொள்ளுவதற்காக பரிசுத்த ஆவியால் படைக்கப்பட்ட பிரதேசங்கள். இந்த மதம் மாற்றும் ஒலிம்பியாட்டில் கேரள பிஷப்பின் சாதனைகளைப் பற்றி பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருந்தன: http://ezhila.blogspot.com/2008/10/blog-post_7732.html

ஆனால், அந்த கேரள பிஷப்பை தோற்கடித்து முன்னணியில் இருக்கிறார் தமிழ்நாட்டு பாதிரியார். விவரங்கள் கீழே: 



படுகொலையான பலான பாதிரியார்: முகம் சுளிக்க வைக்கும் உண்மைக்கதைகள்

http://www.kumudam.com/magazine/Reporter/2008-10-19/pg2.php?type=Repo.


 19.10.08       ஹாட் டாபிக்

வேளாங்கண்ணி திருத்தல ஆலய விடுதியில், பாதிரியார் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. பெண் ஒருவருடன் (!) இவர் இந்த விடுதியில் தங்கியிருந்தபோது, அந்தப் பெண்ணே இவரைக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடி விட்டதாகவும், பாதிரியார் வைத்திருந்த ஏழு லட்ச ரூபாய் பணத்தை லவட்டிக் கொண்டு சென்றிருக்கலாம் எனவும் பல்வேறு தகவல்கள் பரபரத்துக் கொண்டிருக்கின்றன.

அந்தப் பாதிரியாரின் பெயர் செல்வராஜ். ராமநாதபுரம் மாவட்டம், முத்துப்பேட்டையில் உள்ள தூய காணிக்கை அன்னை ஆலயத்தின் பங்குக்குரு இவர். கடந்த 5-ம்தேதி ஸ்டெல்லாமேரி என்ற பெண்ணுடன் நாகப்பட்டினம் வந்த இவர், வேளாங்கண்ணி ஆலயத்துக்குச் சொந்தமான சிறுமலர் (லிட்டில் ஃபிளவர்) விடுதியில் ஸ்டெல்லா மேரியை `சகோதரி'(!) என்று கூறி தங்க வைத்திருக்கிறார். 8-ம்தேதியன்று பாதிரியார் தங்கியிருந்த அறையில் இருந்து ஒரே துர்நாற்றம் கிளம்ப, கதவு வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்த நிலையில் விடுதி ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைய....  குளியலறையில் நிர்வாண நிலையில் காயங்களுடன் கிடந்திருக்கிறது பாதிரியாரின் உடல்.

உடனடியாக மேலிடத்துக்குத் தகவல் போய், பாதிரியார் உடல் தேவாலய பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. வேளாங்கண்ணி ஆலய வட்டாரத்துக்கு நெருக்கமான ஓர் அரசு உயர் அதிகாரி, பெண் எஸ்.ஐ. கரோலின் ஆகியோர் பாதிரியாரின் உறவினர்களை உடனே வரவழைத்து, `மாரடைப்பு காரணமாக' மரணம் சம்பவித்ததாக எழுதி வாங்கியிருக்கிறார்கள். இருந்தும் விஷயம் வெளியே லீக் ஆகிவிட, பத்திரிகையாளர்கள் மற்றும் பா.ஜ.க.வினர் அங்கு குவிந்து விட்டனர்.

அப்படிச் சென்றிருந்த நாகை மாவட்ட பா.ஜ.க. துணைத்தலைவர் புகழேந்தி, நகர பா.ஜ.க. செயலாளர் மகாதேவன் ஆகியோரிடம் நாம் பேசினோம்.

``மாரடைப்பில் இறந்தவர் எப்படி அறைக் கதவை வெளிப்பக்கமாகப் பூட்ட முடியும்? இறந்த பாதிரியாரின் உடலில் காயங்கள் வந்தது எப்படி? நாங்கள் அங்குபோய் எதிர்ப்புத் தெரிவித்த பிறகுதான், `மர்ம மரணம்' என்று போலீஸார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். அந்தப் பாதிரியாருடன் ஒரு பெண் அல்ல, சில பெண்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களைத் தேடி தனிப்படை ஒன்று ராமநாதபுரம் சென்றுள்ளது.

வி.ஐ.பி., மற்றும் வெளியூர் பாதிரிகளுக்கு இந்த சிறுமலர் விடுதிதான் ஒரு முக்கிய தங்குமிடம். ஏற்கெனவே மரியசூசை என்ற பாதிரியார் இங்கே மர்மமாக கொல்லப்பட்டிருக்கிறார். ஆலய நிர்வாகத்தில் பணியாற்றிய ஒரு முக்கிய நபர் தேவாலயத்தில் இருந்த பக்தர்களின் காணிக்கைப் பொருட்களைத் திருடிச் சென்ற சம்பவமும் நடந்திருக்கிறது. `புனிதம் புனிதம்' என்று சொல்லப்படும் இடங்களில் இதுபோன்ற விரும்பத் தகாத சம்பவங்கள் நடந்து மூடி மறைக்கப்படுகின்றன.  செல்வராஜ் கொலையையும் அதுபோல மூடிமறைக்க முயன்றால், நாங்கள் சும்மா விடமாட்டோம்'' என்றனர் அவர்கள்.

வேளாங்கண்ணி பகுதியில் நாம் விசாரித்த போது, ``பாதிரியார் செல்வராஜ் அடிக்கடி பல பெண்களுடன் சிறுமலர் விடுதியில் தங்குவார். அந்தப் பெண்களை மற்ற பாதிரியார்களுக்கும் சப்ளை செய்வார். அவர் வயாகரா, போதைப்பொருள் பயன்படுத்துவார். அவருடன் வந்த பெண்கள் இவர் தந்த செக்ஸ் டார்ச்சர் தாங்க முடியாமல் இவரது உயிர்நிலையை நசுக்கிவிட்டு ஓடிவிட்டனர்'' என்று பகீர் தகவல்களை அளித்தனர்.

வேளாங்கண்ணி காவல்நிலைய பெண் எஸ்.ஐ. கரோலினிடம் நாம் பேசியபோது, ``ஃபாதர் பல பெண்களுடன் தங்கியிருந்ததாகக் கூறப்படுவதுபொய். ஒரேஒரு(!) பெண்ணுடன்தான் அவர் தங்கியிருந்தார். முறையாக போஸ்ட்மார்ட்டம் செய்த பிறகுதான் சிவகங்கையைச் சேர்ந்த அவரது உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தோம். ஃபாதரின் உடலில் எந்தக் காயமும் இருக்கவில்லை. மதுவில் விஷத்தைக் கலந்து அவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதுகிறோம். ஃபாதருடன் தங்கியிருந்த முகவை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணைத் தேடி வருகிறோம்'' என்றார் அவர்.

பாதிரியாரைப் பற்றி நாம் ராமநாதபுரம் பகுதியில் விசாரித்துப் பார்த்தோம். அவரது சொந்த ஊர் ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள எட்டியவயல்.  மூக்கையூர், ஓரிக்கோட்டை ஆலயங்களில்  இவர் பங்குத்தந்தையாக இருந்து செக்ஸ் குற்றச்சாட்டுகளில் சிக்கி விரட்டியடிக்கப்பட்டு கடைசியாக முத்துப்பேட்டை ஆலய பங்குக் குருவாக இவர் இருந்திருக்கிறார்.

`உள்ளூர் டாஸ்மாக் கடைகளில் அமர்ந்து உற்சாக பானம் சாப்பிடுவது, குடித்து விட்டு தெருவோரம் குப்புற விழுந்து கிடப்பது' இவரது வாடிக்கையாம். முத்துப்பேட்டையைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள் சிலரிடம் நாம் பேசியபோது முகம் சுளித்தபடி சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர் அவர்கள்.

``செல்வராஜ் இங்கே வரும்முன் பாதிரியார்களுக்கு சமைத்துப் போட ஆண் சமையல்காரர்தான் இருந்தார். இவர் வந்தபிறகு பெண் சமையல்காரியை நியமித்து இதுவரை ஏழு பெண்களை மாற்றிவிட்டார். சமையல் செய்யும் பெண்ணை அறைக்குள் அழைத்துக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது இவரது பழக்கம். `நீ என்னோடு உறவு வைச்சா கடவுளோடு உறவு வச்ச மாதிரி. நீ புனிதமாயிடுவே(!)' என்று கூறுவது இவரது ஸ்டைல்.  இவருடைய தொல்லை தாங்காமலேயே ஆறு சமையல்காரிகள் மாறிவிட்டார்கள். இவரைப் பற்றி ஆயரிடம் புகார் தந்து இவரை மாற்றுவதாக அவர் உறுதி கூறியிருந்த நிலையில்தான், இந்தப் படுகொலை நடந்து விட்டது'' என்ற அவர்கள், இன்னொரு திடுக் தகவலையும் சொன்னார்கள்.

``ஓரியூர் தேவாலய சிறப்பு ஆராதனைக்குச் செல்வதாக செல்வராஜ் எங்களிடம் கூறிவிட்டு அன்று (4_ம்தேதி) மதியம், ராமநாதபுரம் தனியார் வங்கி ஒன்றில் ஏழு லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு வேளாங்கண்ணிக்குப் போயிருக்கிறார். சிறுமலர் விடுதியில் செல்வராஜுடன் நான்கு பெண்கள் தங்கியிருக்கிறார்கள். பாதிரியார் படுகொலைக்குப் பின் அந்தப் பெண்களையும், ஏழு லட்ச ரூபாய் பணத்தையும் காணவில்லை. கொலை நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் சம்பவம் வெளியே தெரிந்திருக்கிறது. பணத்துக்காக இந்தக் கொலையை நடத்திய அந்தப் பெண்கள், முத்துப்பேட்டைக்கு வந்து பாதிரியார் தங்கியிருந்த இடத்திலிருந்த அவர்கள் தொடர்பான டாக்குமெண்ட்கள் சிலவற்றையும் எடுத்துச் சென்றிருப்பதாகச் சந்தேகிக்கிறோம்'' என்றனர்.

பாதிரியார் செல்வராஜிடம் சிலகாலம் சமையல் பணிபுரிந்த பெண் ஒருவரைச் சந்தித்தோம். பேசவே தயங்கிய அவர், ``பாதிரியார் ஒருமாதிரியானவர்தான். விஸ்கி, பிராந்தி குடித்தபடி என்னை மீன்வறுவல் செய்து எடுத்துவரச் சொல்வார். கையைப் பிடித்து இழுத்து அருகே உட்காரச் சொல்வார். ம். அதெல்லாம் இப்போ எதற்கு? செத்துப் போனவரைப் பற்றி குறைசொல்லிப் பேசுறது மனுஷத்தன்மை இல்லீங்க'' என்றார்.

ஆலய வட்டாரத்தைச் சேர்ந்த சிலரிடம் பேசியபோது, ``இயற்கை எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்கள் அந்தப் பாதிரியாருக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாயைத் தந்திருக்கின்றன'' என்றனர்.

இதற்கிடையே பாதிரியாருடன் தங்கியிருந்த நான்கு பெண்களையும் அடையாளம் காட்டுவதற்காக சிறுமலர் விடுதி வார்டனையும் கையோடு கூட்டிக்கொண்டு ராமநாதபுரம் வந்திருக்கும் நாகை போலீஸார், நேருநகர், முத்துப்பேட்டை, சேதுநகர், மண்டபம் அகதிகள் முகாம் போன்றவற்றில் அந்தப் பெண்களை வலைவீசித் தேடி வருகிறார்கள்.

பாதிரியார் செல்வராஜ் மரணம் குறித்து நாம் வேளாங்கண்ணி பேராலய அதிபர் சேவியர் அடிகளிடம் விசாரித்தபோது, ``போலீஸார் விசாரித்துக் கொண்டிருக்கும் நிலையில், நான் உங்களிடம் பேச முடியாது. செல்வராஜ் வேறு மறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால், எங்களுக்கு அவரைப்பற்றி எதுவும் தெரியாது. பாதிரியார்களுக்கான அறையில் தங்கியதாக செல்வராஜ் போக்குக் காட்டிவிட்டு அந்தப் பெண்கள் தங்கியிருந்த அறைக்கு விசிட் செய்திருக்கிறார். சிறுமலர் விடுதியில் இப்படியொரு சம்பவம் நடப்பது இதுவே முதல்முறை'' என்றார் அமைதி ததும்பும் குரலில்.

எது எப்படியோ? வேளாங்கண்ணி சிறுமலர் விடுதியை இப்போது வேதனை கலந்த சந்தேகத்துடன் பார்த்தபடி செல்கிறார்கள், அங்குள்ள கிறிஸ்துவ மக்கள்.                                    ஸீ

ஸீ விவேக், வல்லம் மகேசு

No comments: