Thursday, September 11, 2008

கிறிஸ்தவ பள்ளி வகுப்பறையில் விநாயகர் பூஜை செய்த 7 மாணவர்கள் `சஸ்பெண்டு'

கிறிஸ்தவ பள்ளி வகுப்பறையில் விநாயகர் பூஜை செய்த 7 மாணவர்கள் `சஸ்பெண்டு'

ஜெய்ப்பூர், செப். 4-

ராஜஸ்தானில், கிறிஸ்தவ பள்ளி வகுப்பறையில் விநாயகர் பூஜை செய்த 7 மாணவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இதனால் ஆத்திர மடைந்த இந்து அமைப்பினர் பள்ளிறை சூறையாடினார்கள்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் செயின்ட் சேவியர்ஸ் மேல் நிலைப் பள்ளி உள்ளது. இப் பள் ளியை கிறிஸ்தவ பாதிரி யார்கள் நடத்தி வருகிறார்கள்.

இப் பள்ளியில் பிளஸ்-2 வணிக வியல் பாடப்பிரிவை சேர்ந்த 7 மாணவர்கள் விநாயகர் சதுர்த்தியை பள் ளியில் கொண்டாட முடிவு செய்தனர். இதன் படி அவர்கள் தாங்கள் வகுப் பறையில் உள்ள கரும்பல கையில் விநாயகர் படத்தை ஒட்டினார்கள்.

பின்னர் தேங்காய், பழம், அவல், பொரி, சுண்டல் சூடம் சகிதம் விநாயகருக்கு பூஜை செய்தனர். பூஜை முடிந்ததும் மாணவர்களுக்கு இனிப்பு, சுண்டல், திருநீறு வழங்கினார்கள்.

வகுப்பறையில் விநாயகர் பூஜை நடந்தது பற்றி ஒரு மாணவன் முதல்வர் பாதிரி யார் ஜோஸ் ஜேக்கப் பிடம் புகார் செய்தான்.

ஜேக்கப் அந்த வகுப்ப றைக்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது அங்கு விநாயகர் பூஜை நடப் பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் வகுப்பறையில் பூஜை நடத்திய 7 மாணவர்களையும் `சஸ்பெண்டு' செய்தார். பூஜையில் கலந்து கொண்ட மாணவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

விநாயகர் பூஜை நடத்திய தற்காக 7 மாணவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட தகவல் ஜெய்ப்பூர் முழுவதும் காட்டுத் தீயாக பரவியது. இதையடுத்து பாரதீய ஜனதா நவமோர்ச்சா அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள் மாலை 6 மணிக்கு செயின்ட் சேவியர்ஸ் பள்ளிக்கு ஆயுதங் களுடன் திரண்டு வந்தனர்.

பின்னர் அங்கிருந்த மேஜை நாற்காலிகளை அடித்து நொறுக்கினார். பூந்தொட்டிகளை எடுத்து கண்ணாடி ஜன்னல்கள் மீது வீசினார்கள். இதில் ஜன்னல்கள் தூள் தூளாக உடைந்து நொறுக்கினர். இதைப் பார்த்ததும் பள்ளி யில் இருந்த மாணவர் கள்-ஆசிரியர்கள் ஓட்டம் பிடித்தனர். பாதிரியார் ஜேக்கப் தனது அறைக்குள் ஓடி உள்பக்கமாகப் பூட்டிக் கொண்டார். இதனால் அவர் உயிர் தப்பினார்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து கலவரக்கரர்களை விரட்டி அடித்தனர். ஆனாலும் அப் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.

பள்ளியை சுற்றி ஏராள மான போலீசார் குவிக் கப்பட்டுள்ளனர்.

1 comment:

John said...

பள்ளி நிர்வாகம் செய்தது தவறுதான். ஆனால் நாங்கள் ஹிந்து வித்யாலய பள்ளிகளில் வந்து கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடினால் ஒத்து கொள்வீர்களா