குண்டுவெடிப்பு: மத்திய அரசை முன்பே எச்சரித்தேன்-மோடி ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 14, 2008 இலவச நியூஸ் லெட்டர் பெற |
டெல்லி: டெல்லியில் தீவிரவாதிகள் பெரும் குண்டுவெடிப்பில் ஈடுபடவுள்ளனர் என்று பிரதமர், உள்துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரை நான் முன்பே எச்சரித்திருந்தேன் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், சிமி - லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 3 கும்பல் ரகசியமாக செயல்பட்டு வருவதாகவும், பெரிய அளவிலான நாச வேலைக்கு அவர்கள் திட்டமிட்டுள்ளதும் தெரிய வந்தது.
ஒவ்வொரு குழுவிலும் 5 முதல் 6 தீவிரவாதிகள் இடம் பெற்றிருப்பதும் இந்த விசாரணையில் தெரிய வந்தது. இந்த குழுவினர் டெல்லியைத் தாக்கலாம் எனவும் போலீஸாருக்கு நம்பகமான தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய அரசை எச்சரித்துள்ளார் குஜராத் முதல்வர் மோடி.
டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து இதுகுறித்து மோடி கூறுகையில், பத்து நாட்களுக்கு முன்பே பிரதமர், உள்துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரை நான் சந்தித்தபோது டெல்லியை தீவிரவாதிகள் தாக்கக் கூடும் என தெரிவித்திருந்தேன்.
எல்லாவற்றையும் தீவிரவாதிகள் திட்டமிட்டு விட்டனர்.உத்தரவுக்காக காத்திருப்பதாகவும், போலீஸார் அதிகபட்ச கண்காணிப்புடன் இருக்குமாறும் பிரதமரிடம் நான் வலியுறுத்தினேன் என்றார் அவர்.
கடந்த இரண்டு மாதங்களாக இந்த தீவிரவாதக் குழுக்கள் டெல்லியில் முகாமிட்டிருந்தன. சுதந்திர தினத்தன்று குண்டு வைக்கவே அவர்கள் முதலில் திட்டமிட்டிருந்தனர். ஆனால் கடும் பாதுகாப்பு காரணமாக அவர்களால் முடியவில்லை. பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என அமைதியாகிவிட்டனர். இப்போது நினைத்தை நிறைவேற்றி விட்டனர்.
நேற்று டெல்லியில் வெடித்த குண்டுகள் அனைத்தும் சாதாரண வகை குண்டுகளாகும். ஆனால் வெடிகுண்டுகளுடன் ஏராளமான ஆணிகள் உள்ளிட்டவற்றைப் போட்டு சேதம் அதிகம் ஏற்படும் வகையில் அதை மாற்றியுள்ளனர். மேலும் டைமர்களும் குண்டுகளுடன் இணைக்கப்பட்டிருந்தன.
மும்பையிலிருந்து வந்த இ மெயில்:
இந்த நிலையில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு அனுப்பிய இ மெயில், கிழக்கு மும்பையின் செம்பூர் பகுதியிலிருந்து வந்துள்ளது. கம்ரான் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்தில் உள்ள கம்ப்யூட்டரிலிருந்து அந்த மெயிலை அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து மும்பை தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் அலர்ட் செய்யப்பட்டுள்ளனர். அந்த நிறுவனத்திற்கு விரைந்து விசாரணையைத் தொடங்கியுள்ள மும்பை போலீஸார் விரைவில் தங்களது விசாரணை அறிக்கையை டெல்லிக்கு அனுப்பவுள்ளனர்.
source:
http://thatstamil.oneindia.in/news/2008/09/14/india-i-had-warned-pm-on-delhi-attack-modi.html
No comments:
Post a Comment