Tuesday, September 9, 2008

கோட்டைக்குள் தொழுகைக்கு கோரிக்கை: கம்யூனிஸ்ட் எம்.பி. ஆதரவு

கம்யூனிஸ்டுகள் தம்மை தெய்வ நம்பிக்கையற்றவர்கள், மதச் சார்பற்றவர்கள் என்றெல்லாம் சொல்லிக் கொள்வார்கள். ஆனால் முஸ்லிம்களையோ கிறிஸ்தவர்களையோ பார்த்தால் எல்லாம் மறந்துவிடும். BBC கொடுத்துள்ள இந்தச் செய்தியைப் பாருங்கள்:

கோட்டைக்குள் தொழுகைக்கு கோரிக்கை

தமிழ்நாட்டிலுள்ள வேலூர் கோட்டை வளாகத்தில் இருக்கும் பள்ளிவாசலில் தொழுகை நடத்த தங்களுக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று முஸ்லீம்கள் தரப்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த கோட்டை வளாகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள இந்திய நடுவணரசின் தொல்லியல் துறை இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவருகிறது. இந்த பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக்குழு ஒன்று சமீபத்தில் இந்த கோட்டை வளாகத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தித் திரும்பியிருக்கிறது.

இந்த குழுவில் இடம்பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பி மோகன் அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது, இந்த கோட்டையில் இந்து மத வழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதை அடிப்படையாகக் கொண்டு, இஸ்லாமிய வழிப்பாட்டிற்கும் தொல்லியல்துறை அனுமதிக்க வேண்டும் என்பதே தங்களுடைய நிலைப்பாடு என்றும், இதற்காக தாங்கள் மத்திய அரசின் உதவியை நாடுவோம் என்றும் தெரிவித்தார்.

நன்றி: BBC-தமிழ்

No comments: