Thursday, June 19, 2008

தாய் மதம் திரும்பும் விழா:180 கிறிஸ்தவ குடும்பங்கள் இந்து மதத்திற்கு மாறின

180 கிறிஸ்தவ குடும்பங்கள் இந்து மதத்திற்கு மாறின
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 15, 2008



திருநெல்வேலி: நெல்லையில், 180 கிறிஸ்தவக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மடாதிபதிகள் முன்னிலையில் இந்து மதத்திற்கு மாறினர்.

நெல்லையில் இந்து மக்கள் கட்சி சார்பில், 'தாய் மதம் திரும்பும் விழா'வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமை தாங்கினார்.

இதில் மாநில இந்து துறவிகள் பேரவை தலைவர் சுவாமி சதாசிவானந்தா, ராகவானந்தா, சங்கரானந்தா, ராமகிருஷ்ணானந்தா உள்ளிட்டோரும், மடாதிபதி செங்கோல் ஆதீனமும் கலந்து கொண்டனர்.

பின்னர் கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், பிராயச்சித்த ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களும் நடத்தப்பட்ன. பிறகு நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 180 தலித் கிறிஸ்தவ குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இந்துக்களாக மாறினர்.

மதம் மாறியவர்களுக்கு 9 நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீரைத் தெளித்து பாத பூஜை செய்யப்பட்டது.

அதன் பின்னர் மதம் மாறியவர்கள் அத்தனை பேரும் நெல்லையர் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டனர்.

மொத்தம் 1000 பேர் இந்து மதத்திற்கு மாறியுள்ளனர். அனைவரும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நாங்குநேரி, சாத்தான்குளம், திசையன்விளை, வள்ளியூர், ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

முதலில் இந்த நிகழ்ச்சி நெல்லையப்பர் கோயிலில் கடந்த மாதம் சிவராத்திரி அன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கோயில் சார்ந்த நிகழ்ச்சிகள் மட்டுமே கோயில் கலையரங்கில் வைத்து நடைபெற முடியும் என்றும் தனியார் நிகழ்ச்சிகள் எதுவும் அனுமதிக்க முடியாது என கோயில் நிர்வாகம் தடை விதித்தது.

இதனை தொடர்ந்து அம்பேத்கார் பிறந்த தினமான நேற்று இந்த நிகழ்ச்சி நெல்லை ஜங்ஷன் சங்கித சபாவில் நடந்தது. மாதமாற்றம் சடங்கு சட்டப்பூர்வமான முறையில் நடைபெற்றது. மதம் மாறியவர்களுக்கு சட்டப்பூர்வ ஆங்கீகாரம் பெருவதற்காக நூற்றாண்டு பழமை வாய்ந்த செங்கோல் மடத்திடமிருந்து மதம் மாறியதற்கான சான்றிதழ் பெற்று பின்னர் அரசிதழில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நன்றி: தட்ஸ்தமிழ்.காம்

1 comment:

மு. மயூரன் said...

ஹிந்துக்களின் தாய்மதம் எது?