இடஒதுக்கீட்டால் பாதிப்பு தான்...: கிறிஸ்தவ மாநாடு வெள்ளிக்கிழமை, ஜூன் 6, 2008 இலவச நியூஸ் லெட்டர் பெற |
நாகர்கோவில்: கிறிஸ்தவர்களுக்கான 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று நாகர்கோவிலில் நடந்த மண்டல அன்பிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், காப்புக்காடு மண்டல அன்பிய மாநாடு தும்பாலியில் நடைபெற்றது.
திரித்துவபுரம், முளகுமூடு மறைவட்டாரங்களின் ஒருங்கிணைப்பாளர் அருட்பணி யேசுரெத்தினம் தலைமையில் திருப்பலியும், பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.
மாநாட்டில், தமிழக அரசு பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்காக ஒதுக்கியுள்ள 3.5 சதவீத இட ஒதுக்கீட்டால் எந்த பயனும் இல்லை. இந்த இட ஒதுக்கீட்டால் முன்பை விட அதிகமாக கிறிஸ்தவ பிற்பட்டவர்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே தமிழக அரசு 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
மண்டல அன்பிய ஒருங்கிணைப்பு தலைவர் ராஜன் நன்றி கூறினார்.
நன்றி : தட்ஸ்தமிழ்
No comments:
Post a Comment