ராமர் இல்லை, சேதுராம் உண்டா?-கருணாநிதிக்கு திருநாவுகரசர் கேள்வி
சனிக்கிழமை, ஜூன் 7, 2008
புதுக்கோட்டை: ராமர் இல்லை, ஆனால் சேது ராம் மட்டும் வேண்டுமா என்று முதல்வர் கருணாநிதிக்கு பாஜக தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுக்கோட்டையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள பாஜக தேசிய செயலாளர் திருநாவுகரசார் வருகை தந்தார்.
அங்கு அவர் பேசுகையில், காங்கிரஸ் அரசு பதவி ஏற்று நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. இந்த கால கட்டத்தில் விலைவாசி உயர்வு, வன்முறை, தீவிரவாதம், வேலை இல்லா திண்டாட்டம், பண வீக்கம், கிராமங்கள் புறக்கணிப்பு போன்றவைகள் தான் நடைபெற்று வருகிறது.
கம்யூனிஸ்ட்கள் மத்திய அரசுக்கு ஆதரவு தந்து விட்டு , வெளியே ஆர்பாட்டம் நடத்துகின்றனர். இது கம்யூனிஸ்ட்களின் இரட்டை வேடம் என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்வது.
நவம்பரில் மத்திய பிரதேசம், டில்லி, போன்ற சில மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுடன் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வரும் வாய்ப்பு உள்ளது. தற்போது நாடு முழுவதும் காங்கிரஸுக்கு எதிரான அலை வீசி வருகிறது.
ராமரே இல்லை என்று கருணாநிதி கூறி வருகிறார். பின்பு எப்படி சேது ராம் பெயர் வையுங்கள் என்று கூறுகிறார். ராமர் இல்லை , சேது ராம் மட்டும் உண்டா? இது குறித்து கருணாநிதி தெளிவுபடுத்த வேண்டும் என்றார் அவர்.
நன்றி : தட்ஸ்தமிழ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment