Monday, June 16, 2008

யோகம் யாருக்கு எதிரி?


அமெரிக்கா மற்றும் கனடாவில் யோகம் புகழ் பெற்று வருகிறது.

கம்யூனிட்டி செண்டர்களில், ஒய் எம் சி ஏ களில், பப்ளிக் ஸ்கூல்களில், மற்றும் ஆங்காங்கே இருக்கும் ஸ்ட்ரிப் மால்களில் உள்ள யோகா ஸ்டுடீயோகளில் யோகம் கற்று தருகிறார்கள்.

மக்களும் கூட்டமாக இல்லாவிட்டாலும் ஓரளவு அதிகமான அளவில் யோகாவை கற்று வருகிறார்கள்.
ஒரு சர்ச்சில் பேஸ்மெண்ட்டில் யோகா கற்று தருகிறார்கள். சர்ச்சில் இருக்கும் கூட்டத்தை விட யோகா கற்று கொள்ள கூட்டம் அதிகம். சர்ச்சில் சாமி கும்பிட நாலு பேர் வந்தால் யோகா கற்று கொள்ள 5 பேர் வருகிறார்கள். இங்கே சர்ச்சுகளில் கல்யாணம் கருமாதிக்கு தான் கூட்டம் அதிகம் வருவார்கள். நம்மூர் மாதிரி வருடபிறப்பு, தீபாவளிக்கு கோவில்களில் கூட்டம் அலைமோதுவது போல் இங்கே கூட்டம் இருப்பதில்லை காரணம் மக்கள் தொகை..

"சர்ச்சுக்கு வராமே நாலு பேர் யோகா கத்துகிறானே நம்ம பொளப்பு என்ன ஆகிறது" என பாதிரியார்களுக்கு சோகம் வந்துவிட்டது.

இந்த பாதிரியார்கள் ஜகஜ்ஜால கில்லாடிகள் உடனே யோகம் கிறிஸ்தவத்திற்கு எதிரி என கிளப்பிவிட்டார்கள். இந்த மாதிரி விஷயங்கள் வலையில் தேடினால் கோடிகணக்கில் கிடைக்கும். உதாரணத்திற்கு ஒன்று இங்கே

யோகம் எப்படி கிறித்துவத்திற்கு எதிரி என பார்ப்போம். யோகத்தில் 4 வகைகள் உண்டு. அவை பக்தி யோகம், ஞான யோகம், கர்மயோகம் மற்றும் ராஜயோகம்.

இதில் மேலைநாட்டினர் அதிகம் பாவிப்பது ராஜயோகத்தில் சில அங்கங்களை மட்டும்தாம்.
ராஜயோகம் எட்டு அங்கங்களை கொண்டது. இவை எவ்வாறு கிறித்துவத்திற்கு எதிரானது என பார்ப்போம்

முதலாம் அங்கம் - யமம் : யமம் என்றால் எதை செய்யகூடாது என்பது. அதாவது வன்முறை கூடாது, பொய் சொல்லகூடாது, எதிலும் அளவிற்கு மிஞ்சகூடாது அதாவது பிரம்ம சார்யம் (பிரம்ம சாரியத்திற்கு இன்னொரு அர்த்தம் உடலுறவு கொள்ளாமல் இருத்தல்), திருட கூடாது மற்றும் பேராசை கூடாது. இந்த அங்கத்தை பார்த்தால் காந்தி மகான் பேசுவதை போல் இருக்கிறதல்லவா.

இவைதாம் கிறித்துவத்திற்கு எதிரானவை என்றால் யோகம் கிறித்துவத்திற்கு எதிரிதான்.

இரண்டாம் அங்கம் - நியமம் : நியமம் என்றால் எதை செய்யவேண்டும் என்பது.

சுத்தம் செய் . உடலை உள்ளத்தை சுற்றுபுறசூழலை சுத்தம் செய்.
சந்தோச படு. நீ உன் உற்றார், உறவினர் இவர்களுடன் சந்தோசமாக இரு.
தவம் செய். தவம் என்பது என்ன ஏழைக்களுக்கு உதவுதல் கூட தவம் தான்.
நல்ல காரியங்கள் செய் என்று அர்த்தம்.
புனித நூல்களை படி : நல்ல புத்தகங்களை படி என்கிறது யோகம். இந்த நூலை மட்டும் படி. மற்றவைகளை படித்தால் நரகத்திற்கு போவாய் என சொல்லவில்லை.

சதாகாலமும் தெய்வீக இருத்தலை கொண்டு வாழ்

இவைதாம் கிறித்துவத்திற்கு எதிரானவை என்றால் யோகம் கிறித்துவத்திற்கு எதிரிதான்.

மூன்றாம் அங்கம் : ஆசனம். இது நாம் அறிந்ததே. உடல் எந்த நிலையில் இருந்தாலும் அங்கே மனதையும் உடலையும் சங்கமித்து அமைதி காண்பதுதான் ஆசனம். ஆசனங்களை செய்வதால் உடல் நலமாய் இருக்கிறது.

இவைதாம் கிறித்துவத்திற்கு எதிரானவை என்றால் யோகம் கிறித்துவத்திற்கு எதிரிதான்.



நான்காம் அங்கம் : பிராணாயாமம். அதாவது மூச்சு பயிற்சி. நாம் அமைதியாக இருக்கும் போதும் சந்தோசமாக இருக்கும் போதும் நம் மூச்சும் சீராகவும் அமைதியாகவும் இருக்கிறதில்லையா. அதேபோல் நம் மூச்சு சீராகவும் அமைதியாகவும் இருக்கும் நேரம் நாம் சந்தோசமாகவும் அமைதியாகவும் இருக்கிறோம்.

இவைதாம் கிறித்துவத்திற்கு எதிரானவை என்றால் யோகம் கிறித்துவத்திற்கு எதிரிதான்.

ஐந்தாம் அங்கம் : பிரத்தியாரம். தன்னுடைய உணர்ச்சிகளை அடக்கி மனதை திட படுத்துதல்

இது கிறித்துவத்திற்கு எதிரானது என்றால் யோகம் கிறித்துவத்திற்கு எதிரிதான்.


ஆறாம் அங்கம் தாரணம். மனதை ஒன்றின் மேல் குவித்தல். நல்லதையே செய்யவேண்டுமென்று மனதை குவித்தல். தெய்வீகத்தின் மேல் மனதை குவித்தல்.

இவைதாம் கிறித்துவத்திற்கு எதிரானவை என்றால் யோகம் கிறித்துவத்திற்கு எதிரிதான்.

ஏழாம் அங்கம் : தியானம். தியானத்தை பற்றி பற்பல மகான்கள் எழுதியிருக்கிறார்கள்.
தியானம் கிறித்துவத்திற்கு எதிரானவை என்றால் யோகம் கிறித்துவத்திற்கு எதிரிதான்.





எட்டாம் அங்கம் : சமாதி. எல்லாம் அறிந்து தெய்வீகத்துடன் கலக்கும் உன்னத நிலைதான் அங்கம்.

இது கிறித்துவத்திற்கும் ஆகையால் ஆப்ராமியத்திற்கும் மிக எதிரி. ஏனென்றல் அவர்களின் நம்பிக்கை படி இறைவன் ஆகாயத்தில் அமர்ந்து தம் மைந்தர்களையும் தூதர்களையும் அவ்வப்போது அனுப்பி மனிதனை மந்தி ஆக்குபவன்.

மனிதன் யோகம் கற்று தெய்வத்துடன் இரண்டற கலந்துவிட்டால் வான இறைவன் என்ற குரங்கை காட்டி பிளைப்பு நடத்துபவர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும். அதனால் தான் யோகம் கிறித்துவத்திற்கு எதிரானது என்று சொல்லி மக்களை என்றைக்குமே அடிமையாக வைத்துக் கொள்ள முனைகிறார்கள்

பாரதம் தந்த அற்புத கொடை யோகம்.
அது இந்து மதத்தின் ஒரு அங்கம்.
மனிதனுக்கு விடுதலை அளிக்கவல்ல ஒரு உன்னதம்.

No comments: