Sunday, June 29, 2008

ஹிந்து நாட்டார்(குல/கிராம) தெய்வங்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் போலி அறிவுஜீவிகள்



http://arvindneela.blogspot.com/2008/06/blog-post.html

இந்து என்று ஒன்றே கிடையாது என்பதாகவும், நாட்டார் தெய்வங்களே எங்கள் தெய்வங்கள் என்றும் ஜல்லி அடிக்கும் ஒரு கூட்டம் உள்ளது. ஆனால் உண்மையில் அம்மன் தெய்வங்கள் தாக்கப்படும் போது, அம்மனை வழிபடும் பக்தர்கள் அடிக்கப்படும் போது, அவர்கள் கண்ணீர் விடும் போது இந்த கூட்டம் மௌனம் சாதிக்கும். இவர்கள் காணாமல் போய்விடுவார்கள். அப்போது அங்கே இந்து இயக்கங்கள் மட்டுமே போராடும்.ஏனென்றால் நாட்டார் தெய்வங்கள்-குல தெய்வங்கள் இந்துக்களின் இரத்தத்தில் உறைபவை. அவற்றுக்காக இரத்தம் சிந்தி போராடவும் கண்ணீர் சிந்தி கதறவும் இந்துக்களால் மட்டுமே முடியும். நாட்டார் தெய்வன்கள் குறித்து ஏசி அறை செமினார்களில் பேசுபவர்களுக்கோ நாட்டார் தெய்வங்கள் இந்து சமுதாயத்தை பிரிக்க ஒரு உக்தி மட்டுமே.


மற்றபடி இந்து நாட்டார் தெய்வங்கள் ஊர்வலங்கள் தடைபட்டாலும் சரி பக்தர்கள் தாக்கப்பட்டாலும் சரி இவர்கள் மௌனி பாபாக்களாக மௌனம் சாதிப்பார்கள். அல்லது பழியை தாக்கப்பட்ட இந்துக்கள் மீதே போட்டாலும் போடுவார்கள். கீழே உள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு இந்து உரிமை போராட்டம். முத்தாரம்மனுக்காக இரத்தம் சிந்தியவர்கள் கண்ணீர் விட்டவர்கள் யார் என பாருங்கள்...



கதறி அழுத இந்து பெண்கள்


நீதி கேட்டு முத்தாரம்மன் கோவிலில் குமுறி அழும் இந்து பெண்
இது மலேசியா அல்ல கன்னியாகுமரி மாவட்ட பிள்ளையார்புரம்நாகர்கோவில்: நாகர்கோவில் அடுத்த பிள்ளையார்புரம் முத்தாரம்மன் கோயிலில் சமீபத்தில் திருவிழா நடந்தது. 2-ஆம் நாள் திருவிழா கடந்த புதன்கிழமை நடைபெற்றது அப்போது சாமி ஊர்வலம் நடந்தது. அப்போது சாமி ஊர்வலம் நடந்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு தெருவில் சாமி ஊர்வலம் செல்ல ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று மாலை இரு தரப்பினர் இடையே சமாதான பேச்சு நடந்தது. ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கிடையே சிலர் சாமி ஊர்வலத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர். எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதியில் சாமி ஊர்வலம் செல்லாமல் இருக்க போலீசார் தடுத்ததால் மோதல் ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். பெண்கள் குழந்தைகள் இதில் சிக்கி காயம் அடைந்தனர். பலரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அந்த இடமே போர்களம் போல் காட்சி அளித்தது. ...நேற்று நாக்ர்கோவில் வந்த பாஜக தலைவர் இல.கணேசன் பிள்ளையார்புரம் சென்று பார்த்தார். அவரை பார்த்ததுமே பெண்கள் சிலர் கதறி அழுதனர். போலிசார் அத்துமீறி நுழைந்து தாக்கினர். பெண்கள் என்று கூட பாராமல் தரக்குறைவாக பேசினர். வீட்டுக்குள் இருந்தவர்களை தேடி தேடி வந்து அடித்தனர் என்று கூறி அழுதனர்.
அல்லல் பட்டு ஆற்றாது அழும் இந்தக் கண்ணீருக்கு பதில் என்ன சொல்வீர்கள்?


[ஆதாரம் படங்கள் & செய்தி தினகரன், தமிழ் முரசு: 7-ஜூன் 2008]

No comments: