Thursday, July 3, 2008

அமர்நாத் கோவில் விவகாரம் : வட இந்தியாவில் பந்த், இருவர் பலி

http://thatstamil.oneindia.in/news/2008/07/03/india-vhp-nationwide-bandh-evokes-partial-response.html


விஎச்பி பந்த்: குஜராத் பாஜக புறக்கணிப்பு, இந்தூரில் 2 பேர் பலி
வியாழக்கிழமை, ஜூலை 3, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற RSS


ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநில அரசு, அமர்நாத் தேவஸ்தானத்திற்கு அளித்த நிலத்தை திரும்பப் பெற்ற முடிவைக் கண்டித்து பாஜக மற்றும் விஸ்வ இந்து பரிஷத் ஆகியவை இன்று அழைப்பு விடுத்த பந்த்தால், வட மாநிலங்களில் மட்டுமே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தென் மாநிலங்களில் பந்த் பிசுபிசுத்தது.

ஜம்மு காஷ்மீர் மாநில சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான நிலத்தை, ஸ்ரீ அமர்நாத் கோவில் தேவஸ்தான வாரியத்திற்கு சமீபத்தில் மாநில அரசு வழங்கியது. இதற்கு பல்வேறு முஸ்லீம் கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்புதெரிவித்து போராட்டத்தில் குதித்தன.

முதல்வர் குலாம் நபி ஆசாத் தலைமையிலான கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கும் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வழங்கி வரும் ஆதரவைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இதையடுத்து ஆட்சியைக் காப்பாற்றும் நோக்கில், நிலம் வழங்கும் முடிவை திரும்பப் பெற்றது ஜம்மு காஷ்மீர் அரசு.

இதற்கு பாஜக, வி.எச்.பி ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளன. இதனால் அங்கு பெரும் கலவரம் வெடித்துள்ளது. ஜம்மு நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் அரசின் முடிவை கண்டிக்கும் வகையில் இன்று பாரத் பந்த் நடத்த பாஜக, விஎச்பி ஆகியவை அழைப்பு விடுத்திருந்தன. இதையடுத்து வட மாநிலங்களின் பல பகுதிகளில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.

போபால் நகரில் முழு அளவில் பந்த் நடந்தது. டெல்லி - போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் ஆக்ராவில் தடுத்து நிறுத்தப்பட்டது.

டெல்லி - நொய்டா நெடுஞ்சாலையில் போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப்பட்டது.

சண்டிகர் நகரின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. பாஜகவினர் ஊர்வலங்களை நடத்தினர். பல இடங்களில்போலீஸார் தடியடி நடத்தும் நிலை ஏற்பட்டது.

இந்தூரில் 2 பேர் பலி:

இந்தூரில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். ஐந்து பேர் காயமடைந்தனர். இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

டெல்லியின் பல பகுதிகளில், பாஜக மற்றும் வி.எச்.பி. அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். கட்டாயப்படுத்தி கடைகளை மூடக் கூறினர்.

மும்பையில் உள்ள ஜம்மு காஷ்மீர் எம்போரியம் விற்பனைக்கடையை பாஜகவினர் அடித்து நொறுக்கினர்.

லூதியானா அருகில் அமிர்தசரஸ் - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலை சிலர் தடுத்து நிறுத்தினர்.

பாஜக ஆட்சி நடக்கும் கர்நாடகத்தில், ஹூப்ளி, தார்வாட் ஆகிய பகுதிகளில் பந்த் முழு அளவில் இருந்தது. மைசூரில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன.

பஞ்சாபின் பல பகுதிகளில் போராட்டத்தில் பாஜகவினர் ஈடுபட்டனர். ஹரியாணாவிலும் பாஜகவினர் மோதலில் ஈடுபட்டனர்.

குஜராத்தில் பந்த் இல்லை:

இதற்கிடையே, இன்றைய பந்த்தில் குஜராத் பாஜக மட்டும் கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து குஜராத் மாநில பாஜக தலைவர் புருஷோத்தம் ருபாலா கூறுகையில்,ஜூலை 4ம் தேதி மாநிலம் தழுவிய ஜகன்னாத் ரத யாத்திரை நடைபெறவுள்ளது. இதை மனதில் கொண்டும், சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டும் பந்த்தில் கலந்து கொள்வதில்லை என்ற முடிவை கட்சி எடுத்துள்ளது.

இதுகுறித்து கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்குடன் ஆலோசித்த பின்னர் முடிவு எடுக்கப்பட்டது. இருப்பினும் இந்த பந்த்திற்கு குஜராத் பாஜக முழு ஆதரவு அளிக்கிறது என்றார்.

ஆனால், நரேந்திர மோடிதான் பந்த்தை தடுத்து நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. பந்த் நடத்தினால் அதனால் முஸ்லீம்களுக்கு எதிராக கலவரம் நடந்தால், அது தனது பெயருக்கு பெரும் களங்கமாக மாறி விடும் என்பதால்தான் பந்த்தை அவர் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால்தான் கட்சி மேலிடத்திடம் கேட்டு குஜராத்தில் மட்டும் பந்த்தை நடத்துவதில்லை என்ற சிறப்பு அனுமதியை மோடி பெற்றதாக கூறப்படுகிறது.

இதுதவிர மோடிக்கும், விஎச்பிக்கும் சமீப காலமாக ஆகாது. குஜராத் பாஜகவும், விஎச்பியும் சமீப காலமாக மோதல் போக்கில் உள்ளன. இதனாலும் கூட விஎச்பி அழைப்பு விடுத்த பந்த்தில்கலந்து கொள்ளாமல் மோடி தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையிலான மோதல் மேலும் பெரிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags: india, jammu kashmir, amarnath, land transfer, bandh, இந்தியா, ஜம்மு காஷ்மீர், அமர்நாத், நில விவகாரம்.

No comments: