Friday, July 18, 2008

குண்டுவெடிப்பில் இறந்த தமிழரின் தந்தை முஸ்லீம் தீவிரவாதிகளை விடுவித்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு

http://thatstamil.oneindia.in/news/2008/07/18/tn-condone-delay-petiti...)

சென்னை: கேரள, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியை, கோவை
குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்ததை எதிர்த்து சென்னை
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, குண்டுவெடிப்பில் பலியான ஒருவரின் தந்தையான மேட்டுப்பாளையத்தைச்
சேர்ந்த வெள்ளிங்கிரி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த மனு நீதிபதி கே.மோகன் ராம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த மனு காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும்,
மனுதாரர் குண்டுவெடிப்பில் பலியானவரின் ரத்த உறவு கொண்டவர் என்பதாலும், 3வது
நபர் இல்லை என்பதாலும் மனு விசாரணைக்கு அனுமதிக்கப்படுவதாக அறிவித்தார். இந்த
மனுவைப் பதிவு செய்து உரிய நீதிபதியின் பரிசீலனைக்கு அனுப்புமாறு
உயர்நீதிமன்றப் பதிவாளருக்கும் அவர் உத்தரவிட்டார்.

மதானி விடுதலை செய்யப்பட்டு 90 நாட்கள் கழிந்த நிலையில் கடந்த 16ம் தேதி இந்த
மனுவை வெள்ளிங்கிரி தாக்கல் செய்தார்.

இதை எதிர்த்து மதானி சார்பில் ஒரு அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், என்
மீதான அவதூறு கற்பிக்கும் வகையிலும், அரசியல் ரீதியாக பழிவாங்கும் வகையிலும்
இதுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இதை விசாரணைக்கு அனுமதிக்கக் கூடாது என்று
மதானி கூறியிருந்தார்.

ஆனால் அதை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார்.

1998ம் ஆண்டு நடந்த கோவை குண்டுவெடிப்பில் 60 பேர் பலியானார்கள். 218 பேர்
காயமடைந்தனர்.மதானி உள்ளிட்ட 166 பேர் கைது செய்யப்பட்டனர்.

2007ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி 158 பேர் குற்றவாளி என கோவை தனி நீதிமன்றம்
அறிவித்தது.

அவர்களில் 88 பேருக்கு 3 ஆண்டுகள் முதல் 9 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை
விதிக்கப்பட்டது. 43 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

15 பேருக்கு 13 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பத்து பேருக்கு பத்து
ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. 2 பேருக்கு 7 ஆண்டு தண்டனை கிடைத்தது. ரியாஸ்
உர்ரஹ்மான் அப்ரூவராக மாறியதால் விடுவிக்கப்பட்டார்.

விடுதலை செய்யப்பட்டவர்களில் மதானியும் ஒருவர். இந்த வழக்கின் தீர்ப்பை
எதிர்த்து தமிழக அரசு இதுவரை அப்பீல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: