Wednesday, July 23, 2008

அடாவடித்தனம் by எழில்

http://ezhila.blogspot.com/2008/07/blog-post_472.html



திண்டுக்கல் நகர், பழனிரோட்டில் அமைந்துள்ளது செல்லாண்டிஅம்மன் கோவில். இந்து குடும்பங்கள் 600க்கு மேலும், முஸ்லீம் குடும்பங்கள் 40ம் வசித்து வருகிறார்கள்.

2032008 அன்று ஈத்கா பள்ளிவாசல், ஈத்கா மைதானம் என்ற பெயர்ப்பலகையை முஸ்லீம்கள் வைத்தனர். ஏற்கெனவே இருந்த பெயர் நாராயண பிள்ளை தோட்டம் என்பது.

முஸ்லீம்களைக் கண்டித்து 1.4.08 அன்று கொடியேற்றுவிழா மற்றும் பெயர்ப்பலகை திறப்பு விழா நடைபெறும் என்று இந்துமுன்னணி அறிவித்தது.

காவல்துறை இந்துமுன்னணிக்கு அனுமதி மறுத்ததால் முஸ்லீம் பெயர்ப்பலகையை 30.3.08 அன்று அகற்றினர். இதற்கு எதிர்ப்பாக முஸ்லீம் இளைஞர்கள் கத்தியைக் காட்டி தாய்மார்களை மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

பொதுமக்கள் புகார் கொடுத்ததும், காவல்துறை 7 முஸ்லீம்களைக் கைது செய்தது. நஸீர் பாஷா எஸ்.ஐ. ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்இல் உள்ளவர்களைத் தூண்டிவிட, முஸ்லீம்கள் மறியல் செய்தனர். அரசு பேருந்து சேதப்படுத்தப்பட்டது.

இதற்குப் பயந்து காவல்துறை முஸ்லீம்களை விடுவித்துவிட்டது. இதைக் கண்டித்து, இந்து முன்னணியினர் இரவு 1 மணிக்குக் கொடியேற்றினர். காவல்துறையினர் இந்துக்கள் 9 பேரைக் கைது செய்தனர். செல்லாண்டி அம்மன் கோவில் பகுதி பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் ஆகியோர் பெண்களைத் தாக்கினர். இதில் 3 பெண்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

2.4.08 அன்று மேற்படி நடவடிக்கைகளைக் கண்டித்து பேருந்து நிலையம், செல்லாண்டி அம்மன் கோயில் பகுதிகளில் நடந்த மறியலில் 100க்கும் மேற்பட்டோர் கைதாகினர். இரு இடங்களிலும் காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடிப் பிரயோகம் செய்தனர்.

பேருந்து நிலையத்தில் தாக்கிய அதிகாரிகள் ஏ.டி.எஸ்.பி. திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் தங்கவேல், ஆயுதப்படை பிரிவு காவலர் கமலதாஸ் மற்றும் சிலர்.

மாவட்டச் செயலாளர் ரவிபாலன் உட்பட 9 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தது, மகளிர் மீது தாக்குதல் ஆகியவற்றைக் கண்டித்து திண்டுக்கல்லில் 12.4.08 அன்று 600 பேர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100 தாய்மார்களும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில்,மாநிலத்தலைவர் அரசுராஜா, மாநிலச் செயலர் சி. சுப்பிரமணியம், பொதுச்செயலர் சி. மூர்த்தி, திருப்பூர் பொறுப்பாளர்கள் கிஷோர், தாமு, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் காவல்துறை அராஜகபோக்கைக் மதமாற்றத்திற்குப் பதிலடி!

கரூர் மாணவர் இளையராஜா எழுதியுள்ள கடிதத்தில்..

எங்கள் வீட்டிற்கு இரு கிறிஸ்துவர்கள் வந்தார்கள். வந்தவர்கள் என்னிடம் இயேசு உங்களை நேசிக்கிறார் என்றார்கள். அதற்கு நான், எங்களை இந்துக் கடவுள்கள் தான் நேசிக்கிறார்கள் என்றேன்.

கையில் வைத்திருந்த புத்தகத்தைக் கொடுத்து இதனைப் படியுங்கள். உங்கள் கைகால் வலி, மூட்டு வலி எல்லாம் தீர்ந்துவிடும் என்றனர். அதற்கு எங்களுக்கு எங்களது புனித நூல் பகவத்கீதை இருக்கிறது. பலன் தரும் தேவாரமும், திருவாசகமும் இருக்கிறது என்றேன்.

ஒரு வெள்ளைக்கொடியை எடுத்துக் கொடுத்து வைத்துக் கொள்ளச் சொன்னார்கள். எங்களுக்குப் புனிதமான காவிக்கொடி இருக்கிறது என்றேன்.

மீண்டும் வலிய வந்து மதப்பிரச்சாரம் செய்தார்கள், நான், போகிறீர்களா? எனக் கட்டையை எடுத்துக் காட்டினேன்; ஓடி விட்டார்கள்.

வெளியில் வந்து பார்த்தேன். பல வீடுகளுக்கு இதுபோல் கொடுத்துள்ளது தெரிந்தது. எங்கள் பகுதியில் உள்ள அனைவரும் இந்துக்கள். நான் ஒவ்வொரு வீடாகச் சென்று கிறிஸ்தவர்கள் கொடுத்த புத்தகத்தையும் வெள்ளைக் கொடியையும் வாங்கி அவர்கள் முன்னாலேயே கிழித்துப் போட்டேன்.

கரூர் ஜில்லா சேவா பிரமுக் ராஜேந்திரன்ஜி வீட்டிலும் கொடுக்க வந்தார்கள். அவர் கிறிஸ்தவர்களைக் கண்டித்து அனுப்பி விட்டார்.

இந்துக்களின் எதிர்ப்பைக் கண்டு அஞ்சி திரும்பி அவர்கள் ஊருக்கே போய்விட்டார்கள்.

நாட்டுப்புறத்தான்

http://hindumunnani.org/pasuthai7.asp

No comments: