Wednesday, July 23, 2008

ஆலயச் சொத்தை மீட்க ஓர் அறப்போராட்டம் by Ezhil

ஆலயச் சொத்தை மீட்க ஓர் அறப்போராட்டம்

http://ezhila.blogspot.com

ஈரோடு மந்தைவெளி மாரியம்மன் என்கிற ஸ்ரீ பெரியமாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை சி.எஸ்.ஐ. சர்ச் நிர்வாகம் அபகரித்துள்ளதைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் பொங்கல் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1931ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அரசு சர்வே படி பெரிய மாரியம்மன் ஆலயத்திற்கு 750 அடி தொலைவில் பிடாரி அம்மன் என்ற பட்டத்து அம்மன் கோவில் இருந்ததாக காட்டப்பட்டுள்ளது.

இதன் பின்னர் சி.எஸ்.ஐ. என்ற கிறிஸ்தவ அமைப்பால் அப்புறப்படுத்தப்பட்ட பிடாரி அம்மன் சிலை தற்போது மாரியம்மன் கோயில் நிர்வாக அலுவலகம் முன்பு வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.

40 ஏக்கர் நிலப்பரப்பில் 12.66 ஏக்கர் ஆவணங்கள் இருப்பதாக மாவட்ட ஆட்சியாளரிடம் 1998இல் சி.எஸ்.ஐ. நிர்வாகம் தகவல் அளித்தது.

தற்போது 14.46 ஏக்கர் ஆவணம் உள்ளதாக அறிக்கை விடுத்துள்ளனர். (காலைக்கதிர் 25308).

தமிழக அரசு சி.எஸ்.ஐ. நிர்வாகத்தின் சொத்து ஆவணங்களைச் சரிபார்த்து ஆக்கிரமிக்கப்பட்ட ஆலய நிலங்களை மீட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோருகிறது.

ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவர் பூசப்பன், மாநிலச் செயலர் சண்முகசுந்தரம், கேசவபெருமாள் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆலயச் சொத்தை மீட்க தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் காலதாமதம் இன்றி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

http://hindumunnani.org/pasuthai11.asp

No comments: