Thursday, July 10, 2008

மதுரை பிஷப் மீது தீண்டாமைக் கொடுமை வழக்கு

மதுரை பிஷப் மீது தீண்டாமைக் கொடுமை வழக்கு

உலகம் முழுவதும் அடிமை முறையை பரப்பிய கிறிஸ்துவம் தனது ஆதிக்க மனப்பான்மையிலிருந்து இன்னும் வெளிவரவில்லை என்று நன்றாக தெரிகிறது.
--
மதுரை பிஷப் மீது தீண்டாமைக் கொடுமை வழக்கு
புதன்கிழமை, ஜூலை 9, 2008

மதுரை: மதுரை-ராமநாதபுரம் கத்தோலிக்க கிறிஸ்துவ சபையின் பிஷப் ஜோசப் பெர்னாண்டோ மீது தீண்டாமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை - ராமநாதபுரம் கத்தோலிக்க கிறிஸ்துவ சபையின் கீழ் பல கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விருதுநகர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ஜோசப் ஆனந்தராஜ் என்பவர் தனக்கு இடமாறுதல் வேண்டினார்.

அவரது இடமாறுதலுக்காக மதுரை மாவட்ட விடுதலை சிறுத்தை அமைப்பு செயலாளர் பாண்டியம்மாள் சிபாரிசு செய்துள்ளார்.

ஆனால் அந்த பரிந்துரையை மதுரை - ராமநாதபுரம் கத்தோலிக்க கிறிஸ்துவ சபையின் பிஷப் ஜோசப் பெர்னாண்டோ ஏற்க மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் தன்னை பிஷப் ஜோசப் பெர்னாண்டோ ஜாதி பெயரை கூறி திட்டியதாக காவல் நிலையத்தில் பாண்டியம்மாள் புகார் செய்தார்.

அதன் பேரில் மதுரை - ராமநாதபுரம் கத்தோலிக்க கிறிஸ்துவ சபையின் பிஷப் ஜோசப் பெர்னாண்டோ மீது தீண்டாண்மை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments: