மதுரை: இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் கொலை வழக்கில் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவராக இருந்தவர் காளிதாஸ். இவரை 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடந்த 21.6.2005 அன்று வெட்டி படுகொலை செய்தது.
இது குறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிவு இப்ராகிம் ஷா, அனீஸ், மைதீன், மைதீன் பீர், சேக் அலாவுதீன், ஹக்கீம், பிலால் மாலிக் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் பிலால் மாலிக்கு 16 வயது என்பதால் அவரது வழக்கு சிறுவர் சீர்திருத்த நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
மற்ற 6 பேர் மீதான வழக்கு மதுரை மாவட்ட முதலாவது விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி ஜேக்கப் விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் நீதிபதி நேற்று தீர்ப்பு கூறினார்.
இப்ராகிம் ஷா, அனிஸ் ஆகியோர் மீது சாட்டப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5,000 அபராதமும் விதிக்கப்படுகிறது.
மற்ற 4 பேரின் குற்றங்கள் சரிவர நிரூபிக்கப்படததால் அவர்களை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார். - Thats Tamil
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
மற்ற நாலு பேரும் வெளியே வந்து ஊருக்கு ஊர் குண்டு வைத்து தமிழர்களை கொல்வார்கள்.
கொடுமை!
Post a Comment