Friday, August 22, 2008

திரிகோணமலை பிள்ளையார் ஆலயத்திற்கருகில் சிவலிங்கத்தின் ஆவுடையார் பகுதி மீட்பு

தங்கநகர் பிள்ளையார் ஆலயத்திற்கருகில் சிவலிங்கத்தின் ஆவுடையார் பகுதி மீட்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்
14. August 2008 09:29
திருகோணமலை மாவட்டம் சேருவில பிரதேச செயலர் பிரிவில் உள்ள தங்கநகர் என்ற தமிழ்க் கிராமத்தில் அங்குள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றின் அருகில் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கான பொதுக் கட்டிடத்தை நிறுவுவதற்கான அத்திவார வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போது புதையுண்ட நிலையில் சிவலிங்கம் ஒன்றின் ஆவுடையார் பகுதி மீட்கப்பட்டுள்ளது.

ஆவுடையாருடன் வேறு தொல்பொருள் சிதைவுகளும் அப்பகுதியில் காணப்படுவதாகவும் அந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்ட கிராமவாசிகள் தெரிவித்தனர். அதனை அடுத்து இப்பிரதேசத்தின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கான பொதுக் கட்டடத்தை நிர்மாணிக்கும் வேலையை அதனைப் பொறுப்பெடுத்த நிறுவனம் இடைநிறுத்தியிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.

கிளிவெட்டிக்கு அருகில் மூதூர் மட்டக்களப்பு பிரதான வீதியில் தங்கநகர் கிராமம் அமைந்துள்ளது. கிராமத்தின் மத்தியில் பிரதான வீதியின் ஓரத்தில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றின் அருகில் அத்திவாரம் தோண்டும் வேலை கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானது.

இந்து ஆலயம் ஒன்றினுடையதாகக் கருதப்படும் தொல்பொருள் சிதைவுகள், எச்சங்கள் வெளிவந்ததையடுத்து ஒப்பந்த வேலையில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் சேருவில பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸாருக்கு தகவல் அனுப்பினர்.


To read full article:

http://swissmurasam.info/content/view/8441/26/

No comments: