ஆகஸ்ட் 3, 2008 அன்று மாலை நான்கு மணிக்கு சான் ஓசே, (கலிஃபோர்னியா மாநிலம், அமெரிக்கா) நகரின் மத்தியில் அமைந்த பூங்காவில் தீவீரவாதத்துக்குக் கண்டனம் தெரிவிக்கவும், இந்தியாவின் பெங்களூரு, அஹமதாபாத் நகரங்களில் குண்டு வெடிப்பில் இறந்தோர்க்கு அஞ்சலி செலுத்தவும் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
யூத அமைப்புகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமது கண்டனத்தைத் தெரிவித்தன. சான்ட்டா கிளாரா நகர மேயர், சான் ஓசே முன்னாள் மேயர் மற்றும் சில நகரசபைத் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். 35 இந்திய அமைப்புகள் கலந்துகொண்டு கண்டனம் தெரிவித்தன.
இந்திய அமைப்புகளின் தலைவர்கள் பொத்தாம் பொதுவாகத் 'தீவிரவாதம், தீவிரவாதம்' என்று பேசிக் கொண்டிருந்தபொழுது யூதப்பெண்மணி ஒருவர் வந்து இவை இஸ்லாமிய பயங்கரவாதம், முஸ்லீம்கள் செய்யும் மதரீதியான தீவீரவாதம் என்று நெற்றியில் அடித்தாற்போல் பேசினார். அதன்பின் வந்தவர்கள் இந்த உண்மையை பகிரங்கமாகக் கூறத் தயங்கவில்லை. பாகிஸ்தானையும் ISI-ஐயும் இந்திய முஸ்லீம்களையும் கடுமையாகக் கண்டனம் செய்தார்கள். காஷ்மீர் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கொந்தளிப்போடு பேசினார். POTA போன்ற சட்டங்களை மீண்டும் கொண்டுவந்து மக்களைப் பாதுகாக்க இந்திய அரசாங்கத்தைக் கோரித் தீர்மானம் இயற்றப்பட்டது. அமெரிக்க, இந்திய தேசீய கீதங்களுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
No comments:
Post a Comment