தீவிரவாத மிரட்டலுக்கு போலீஸ் பயப்படாது-டிஎஸ்பி வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 1, 2008 இலவச நியூஸ் லெட்டர் பெற |
நெல்லையில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் இந்து முண்ணனி தலைவர் ராமகோபாலன், தென்காசி டிஎஸ்பி மயில்வாகனன், மற்றும் சென்னையை சேர்ந்த இரண்டு போலீஸ் அதிகாரிகள் ஆகியோரை குண்டு வீசி கொல்ல தீட்டிய சதி திட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து டிஎஸ்பி மயில்வாகனன் கூறுகையில்,
போலீஸ்காரர்கள் யாருக்கும் பகைவனும் இல்லை, நண்பனும் இல்லை. நியாயமாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவே எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தீவிரவாத மிரட்டலுக்கு போலீஸ் என்றுமே பயப்படாது. நாங்கள் எங்கள் கடமையை செய்கிறோம்.. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்று அவர் கூறினார்.
நேரடி தேர்வு மூலம் டிஎஸ்பியானவர் மயில்வாகனன். கடந்த 2007ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி தென்காசி டிஎஸ்பியாக பொறுப்பேற்றார். இவர் அதிரடியாக பணியாற்றி உயர் போலீஸ் அதிகாரிகளின் பாராட்டை பலமுறை பெற்றுள்ளார்.
இதனால் மயில்வாகனனை நெல்லை மாவட்டத்தின் சென்சிடிவ் ஆன பகுதியில் பணி அமர்த்த வேண்டும் போலீஸ் உயரதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். சமீபத்தில் தென்காசியில் நடந்த ஒரு பிரச்சனையில் முக்கிய பிரமுகர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் டிஎஸ்பி மயில்வாகணன் எதிர்தரப்பையும் வரவழைத்து இரண்டு பேரின் புகார்களையும் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இது தீவிரவாதிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால்தான் அவர்கள் டிஎஸ்பி மயில்வாகனனையும் தங்கள் ஹிட் லிஸ்டில் சேர்த்துள்ளனர்.
டிஎஸ்பி மயில்வாகணன் மீது தீவிரவாதிகள் காட்டமாக இருப்பதை முன்கூட்டியே அறிந்த உளவு பிரிவு போலீசார் இதுகுறித்து அவருக்கும் தெரிவித்து உள்ளனர். இதனால் டிஎஸ்பி மயில்வாகணன் அலர்ட்டாக இருந்தார்.
For full article:
http://thatstamil.oneindia.in/news/2008/08/01/tn-we-wont-fear-terrorists-dsp-mayilvaganan.html
No comments:
Post a Comment