சென்னை: சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் மசூதி வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல காவல்துறை தடை விதித்துள்ளது. ஆனால் தடையை மீறி நாங்கள் ஊர்வலம் நடத்துவோம் என இந்து முன்னணித் தலைவர் ராம.கோபாலன் கூறியுள்ளார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை மணலியில் இந்து முன்னணி சார்பில் நிறுவப்பட்டு வரும் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகளை ராம.கோபாலன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
ஐஸ் ஹவுஸ் பகுதியில் மசூதி வழியாக சிலைகள் ஊர்வலம் செல்ல போலீஸார் தடை விதித்துள்ளனர். ஆனால் அதை மீறி நாங்கள் விநாயகர் சிலைகளைக் கொண்டு செல்வோம். எங்களைத் தடுக்க யாருக்கும் உரிமை.
எங்கள் தொண்டர்கள் கட்டுப்பாடுடன் செல்வார்கள். நாங்கள் வழக்கம் போல தடையை மீறி ஊர்வலம் செல்வோம், கைதாவோம். எங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது.
விநாயகர் ஊர்வலத்தில் யாரும் வண்ண பொடிகளை தூவக்கூடாது என்று கண்டிப்பாக கூறி இருக்கிறோம். பொறுப்பாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்றார்.
http://thatstamil.oneindia.in/news/2008/08/26/tn-vinayaga-statue-procession-hindu-munnani-to-breach.html
Tuesday, August 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment