பழனி, ஆக.25-
பழனியில் விநாயகர் சதுர்த்தி சிலைகள் ஊர்வலம் 4 நாட்கள் நடைபெற உள்ளது.
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி வருகிற செப்டம்பர் மாதம் 3-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பழனியில் இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, சிவசேனா, பாரதீய ஜன சக்தி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது.
வருகிற செப்டம்பர் 6-ந்தேதி (சனிக்கிழமை) இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற உள் ளது. சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், பொதுச்செயலாளர் அண்ணாத்துரை ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.ஏற்பாடுகளை திண்டுக்கல் மேற்கு மாவட்ட இந்துமக்கள் கட்சி அமைப்பாளர் சிவக்குமார் மற்றும் கட்சி நிர்வாகி கள்செய்து வருகின்றனர்.
இந்து முன்னணி
செப்டம்பர் 7-ந்தேதி இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்நடைபெற உள்ளது. சிறப்பு அழைப்பாள ராக காரைக்குடி முன்னாள் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. எச்.ராஜா கலந்து கொள்கிறார். ஏற்பாடுகளை இந்து முன்னணி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர்.
செப்டம்பர் மாதம்8-ந்தேதி சிவசேனா சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற உள்ளது. சிவசேனா மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கமுத்து கிருஷ்ணன், மாநில அமைப்பு செயலாளர் பாலாஜி ஆகியோர் சிறப்பு அழைப் பாளர்களாககலந்து கொள்கின்றனர்.ஏற்பாடு களை மாநில செயலாளர் சந்திர மோகன் மற்றும்நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
ஜனசக்தி
பாரதீய ஜன சக்தி சார்பில் செப்டம்பர் 9-ந்தேதி விநாய கர் சிலைகள் ஊர்வலம் நடை பெறுகிறது. சேகர் தலைமை தாங்குகிறார். கவுன்சிலர் கார்த்திகேயன், சிவராஜ் குருக்கள், பாரதீய ஜன சக்தி மாநில செயற்குழு உறுப்பினர் மாணிக்கம் ஆகியோர் முன் னிலை வகிக்கின்றனர்.மாநில பொதுச்செயலாளர் ஜீவானந் தம் தொடங்கி வைக்கிறார்.
இந்து மக்கள் கட்சி சார்பில் 31 சிலைகளும், இந்து முன் னணி சார்பில் 72 சிலைகளும், சிவ சேனா சார்பில் 40 சிலைகளும், பாரதீய ஜன சக்தி சார்பில் 18 சிலைகளும் வைக்க ஏற் பாடு செய்து வருவதாக சம்பந்தப்பட்ட அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் ஊர்வலத்தை முன் னிட்டு தற்போதே வரவேற்பு விளம்பர பலகைகள் வைக்கப் பட்டு வருகின்றன.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=434099&disdate=8/25/2008&advt=2
Tuesday, August 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment