பழநி கோவில் ரோப் கார் செப்டம்பர் 2ல் இயக்கம் |
ஆகஸ்ட் 22,2008,21:38 IST |
பழநி: விபத்து காரணமாக நிறுத்தப்பட்ட பழநி கோவில் ரோப் கார் ஓராண்டிற்கு பின்பு புதுப்பொலிவுடன் செப்., 2ல் இயக்கப்படவுள்ளது. பழநி கோவில் ரோப் கார் சென்ற ஆண்டு ஆக., 26ல் விபத்துக்குள்ளானது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி ரூ.ஒரு கோடி செலவில் புதிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விபத்திற்கு முன்பு 20 பெட்டிகள் இணைக்கப்பட்டு ரோப் கார் இயக்கப்பட்டது. இனி மேல் எட்டு பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டு இயக்கப்படவுள்ளது. புதிதாக வடிவமைக்கப்பட்ட ரோப் காரின் இயக்கத்தை அறநிலையத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் துவக்கி வைக்கிறார். மேலும் ரூ.5.6 கோடி மதிப்பீட்டில் துவங்க உள்ள புதிய கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா, தானியங்கி பஞ்சாமிர்தம் தயாரிக்கும் நிலையம் திறப்பு விழா ஆகியவையும் நடக்கிறது. இதற்கான விழா செப்., 2ல் காலை 10.45 மணிக்கு பழநி அடிவாரத்தில் நடக்கிறது. http://www.dinamalar.com/latestnews.asp#6447 |
No comments:
Post a Comment