இந்தியாவின் பகுதியாக இருந்த கச்சத்தீவை ஸ்ரீலங்காவுக்கு தாரை வார்த்தது காங்கிரஸ் அரசு. இன்று அதனருகில் தமிழக மீனவர்கள் சென்றாலே ஸ்ரீலங்கா சுட்டுத் தள்ளுகிறது. இந்நிலையில் சுதந்திர தினத்தன்று அங்கே கொடி ஏற்றப் போவதாக அறிவித்திருந்தார் 'வீர இந்து' அர்ஜுன் சம்பத். அவரை அதைச் செய்யவிடாமல் மிரட்டுவது ஸ்ரீலங்கா அரசல்ல, ராமநாதபுரம் கலெக்டர்! இந்தச் செய்தியைப் படியுங்கள்...
கச்சதீவில் இந்திய கொடி ஏற்றினால் கடும் நடவடிக்கை-கலெக்டர்
புதன்கிழமை, ஆகஸ்ட் 13, 2008
ராமநாதபுரம்: கச்சதீவில் இந்திய தேசியக் கொடியை ஏற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கச்சத்தீவில் இந்தியாவின் உரிமையை நிலைநாட்ட வேண்டும், கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி சுதந்திர தினத்தன்று கச்சத்தீவில் இந்திய தேசியக் கொடியை ஏற்றப்போவதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அறிவித்துள்ளார்.
இந் நிலையில், கச்சத்தீவில் சட்டத்திற்கு புறம்மாக செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு படகு கொடுத்து உதவுபவர்களுக்கு மீன் பிடி உரிமம், டீசல் உரிமம் ஆகியவை ரத்து செய்யப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ் குமார் எச்சரித்துள்ளார்.
ஆனால், திட்டமிட்டபடி கச்சதீவில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்படும் என இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளை இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
இதனால் போலீசார் ராமநாதபுரம் கடல் பகுதியில் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.
நன்றி: தட்ஸ்தமிழ்.காம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment