தினமலர் செய்தி:
பயங்கரவாதத்திற்கு ஆள் சேர்ப்பு மையமாக மாறி வரும் தமிழகம்: 'சிமி' தடையால் புதுப்புது பெயரில் அமைப்புகள் உருவாக்கம்
ஆகஸ்ட் 05,2008,00:00 IST
பயங்கரவாதத்திற்கு ஆள்சேர்ப்பு மற்றும் பயிற்சி மையமாக தமிழகம் மாறிவருகிறது. உத்தரப்பிரதேசத்தில் தொடங்கப்பட்ட 'சிமி' அமைப்பிற்கு உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து,2001ம் ஆண்டு செப்டம்பரில் அந்த அமைப்பிற்குத் தடை விதிக்கப்பட்டது. அவர்கள் வெவ்வேறு பெயர்களில் அமைப்புகளை ஏற்படுத்திச் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த அமைப்புகள் அனைத்தும், 'உலகம் முழுவதும் முஸ்லிம்களின் ஆளுகைக்குள் கொண்டுவர வேண்டும்' என்ற கொள்கையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இதற்காகப் பிற மதத்தினரை முஸ்லிம்களாக மதம் மாற்றுவது, அவ்வாறு மதம் மாறிய இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதைப் பிரதான பணியாகக் கொண்டுள்ளன. இந்தப் பணி தமிழகத்தில் பரவலாக ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. வறுமையில் வாடுபவர்கள், இளம் விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களை இலக்காகக் கொண்டு மதம் மாற்றுகின்றனர்.
குறிப்பாக, தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் தாலுகாவில் ஆதிதிராவிடர் இன மக்களை மதம் மாற்றும் சம்பவம் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவரும், நீலப்புலி அமைப்பின் தலைவருமான டி.எம்.மணி (சமீபத்தில் இவரும் முஸ்லிமாக மதம் மாறிவிட்டார்) பெருமளவு உதவி செய்து வருகிறார். வறுமை மற்றும் தீண்டாமை கொடுமையால் அவதிப்படும் இப்பகுதி மக்களிடம், இவற்றில் இருந்து விடுபட முஸ்லிமாக மதம் மாறுவது ஒன்றே சரியான தீர்வு என்ற வகையில் மதம் மாற்றி வருகின்றனர்.
இவைதவிர, பள்ளிகளில் படிக்கும் இளம் மாணவிகளை முஸ்லிம் இளைஞர்களைக் காதலிக்க வைத்து தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வருகின்றனர். பெண்ணைத் தேடி வரும் பெற்றோர்களிடம், மதம் மாறினால் பெண்ணை அனுப்புவதாக கூறுகின்றனர். தங்கள் குடும்ப கவுரவத்தைக் கருதி பலர் மதம் மாறுகின்றனர்.
சமீபத்தில் பாபநாசத்தில் டாக்டர் ஒருவரின் கிளினிக்கில் வேலை செய்த சகோதரிகள் இருவரை சென்னைக்கு அழைத்துச் சென்று தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து முஸ்லிமாக மதம் மாற்றினர். இந்தப் பெண்களின் பெற்றோர் சென்னை ஐகோர்ட்டில் "ஹேபியஸ் கார்பஸ்' மனு தாக்கல் செய்த பிறகே தங்களது மகள்களைப் பார்க்க முடிந்தது. இருப்பினும் அந்தப் பெண்கள் தாங்கள் விரும்பியே முஸ்லிமாக மதம் மாறியதாக கோர்ட்டில் கூறினர்.
இதுபோன்று பல்வேறு வகைகளில் பிற சமூகத்தினரை முஸ்லிம்களாக மதம் மாற்றி வருகின்றனர். மதம் மாறும் முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு கும்பகோணத்தில் உள்ள அன்பகத்தில் குரான் கற்றுத் தரப்படுகிறது.
இளைஞர்களுக்கு, நெல்லை மற்றும் தேனி மாவட்டங்களுக்கு அழைத்துச் சென்று அங்கு மாதக் கணக்கில் தங்க வைத்து பயிற்சி அளிக்கின்றனர். இங்கு என்ன பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது அந்தந்தப் பகுதிப் போலீசாருக்கே தெரிவதில்லை. அரசின் நிதியுதவியுடன் நடைபெறும் அரபிக் பள்ளிகளில் கூட போலீஸ் உள்ளிட்ட வெளியாட்கள் எவரையும் அனுமதிப்பதில்லை.
இவ்வாறு பிற மதத்தினரை முஸ்லிம் மதத்திற்கு மாற்றிட உள்ளூர் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முஸ்லிம் அமைப்புகளும் பண உதவி அளிக்கின்றன. இவைத்தவிர, மதம் மாற்றும் நிகழ்ச்சியை 'சிடி' தயாரித்து, வெளிநாட்டில் உள்ள முஸ்லிம் அமைப்புகளுக்கு அனுப்புகின்றனர். அந்த அமைப்புகள், தமிழகத்தில் மதம் மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புகளுக்குப் பெருமளவு நிதியுதவி அளித்து வருகின்றன. இந்த வெளிநாட்டு நிதியுதவி என்.ஆர்.ஐ. கணக்கில் அனுப்பி வைக்கப்படுகிறது.
'நெட் ஒர்க்கிற்கு எடுத்துக்காட்டு':
சென்னை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கிளையில் பணியாற்றிய முஸ்லிம் பெண் ஊழியர் சில மாதங்களுக்கு முன் திருவாரூர் கிளைக்கு மாற்றலாகி வந்தார். அவர் முஸ்லிம் என்பதை அறிந்த உள்ளூர் முஸ்லிம் அமைப்பின் நிர்வாகிகள் சிலர் சந்தித்து மதக் கோட்பாட்டுப் படி 'பர்தா' அணிந்து பணிக்கு வர வேண்டும் என வலியுறுத்தினர். அந்தப் பெண் அதைப் பொருட்படுத்தாததால், ஆத்திரமடைந்த முஸ்லிம் அமைப்பினர், வங்கியில் பணி முடித்துவிட்டு வந்த பெண் ஊழியரை நடுரோட்டில் தாக்கினர்.
இதுகுறித்து அந்தப் பெண், சக ஊழியர்களின் உதவியுடன் திருவாரூர் போலீசில் புகார் செய்துவிட்டு விடுப்பில் சென்னைக்குச் சென்றுவிட்டார். அதை அறிந்த முஸ்லிம் அமைப்பினர், இரவோடு இரவாக சென்னையில் உள்ள தங்களது அமைப்பினரிடம் பேசினர். மறுநாள் காலை, அந்தப் பெண் போலீஸ் ஸ்டேஷனில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார். தற்போது அந்தப் பெண் ஊழியர் வேறு ஊருக்கு மாற்றல் வாங்கி சென்று விட்டார்.

No comments:
Post a Comment