
காஷ்மீர் அமர்நாத் யாத்ரீகர்களுக்காகப் போதிய அளவு நிலம் கேட்டு இந்து முன்னணி சார்பில் குமரி மாவட்டத்தின் பன்னிரண்டு சிவாலயங்கள் உட்பட 94 கோவில்களில் சிவநாம ஜெபத்துடன் வழிபாடு நடந்தது. இதே காரணத்துக்காகக் கன்னியாகுமரி மாவட்ட காரியக்கார விளை இந்து வாணியர் சமுதாய முத்தாரம்மன் கோவிலில் சிவநாம ஜெபமும் பூஜையும் நடந்தன.
சிறுபான்மை வன்முறைக்கு அரசை அடகுவைத்துவிட்ட இந்தியாவில் பெரும்பான்மை இந்துக்களின் துயரத்தில், தொடரும் காஷ்மீர் வன்முறைகளும் ஒரு சோக அத்தியாயம்.
இத்தகைய பிரார்த்தனைக் கூட்டங்கள் இந்தியாவில் கிராமம் கிரமமாக நடக்க வேண்டும். அப்போதுதான் பாரதம் ஒரே தேசம் என்பதைப் பிரிவினைவாதிகள் உணர்வார்கள். ஜெய் ஹிந்த்!
No comments:
Post a Comment